கமலுக்கு அடுத்து ரஜினி... - சிபிராஜ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
சென்னை : சிபிராஜ் நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த 'சத்யா' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கமல் பட தலைப்பில் உருவான அந்தப் படம் தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன க்ஷணம் படத்தின் ரீமேக். இந்தப் படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கினார்.
அடுத்து சிபிராஜ் 'ரங்கா' என்ற படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் வினோத் இயக்கும் இந்தப் படத்தில், நிகிலா விமல் ஹீரோயினாக நடிக்கிறார். 'ரங்கா' என்பது, ரஜினிகாந்த் நடிப்பில் 1982-ம் ஆண்டு வெளியான படம்.

சிபிராஜ் நடிக்கும் 'ரங்கா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிபிராஜ் பணி பிரதேசத்தில் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது.
சிபிராஜின் 'சத்யா' படம் வரவேற்பு பெற்றதையடுத்து, அடுத்த படமான 'ரங்கா' மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அடுத்தடுத்து கமல், ரஜினி படங்களின் டைட்டில்களில் நடிக்கவிருப்பதும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











