சிபிராஜின் ரங்கா.. பிப்ரவரியில் திரைக்கு வருகிறது!

சென்னை : சிபிராஜ் நடிக்கும் ரங்கா படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் படம் பிப்ரவரியில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

சிபிராஜ் கடைசியாக சத்யா படத்தில் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு ஒரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. அதனையடுத்து தற்போது ரங்கா எனும் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு பிரபல ரஜினி பட தலைப்பாகும் .1982ல் வந்த படத்தின் தலைப்பை இப்படத்திற்கு வைத்து இருக்கிறார்கள் அந்த பெயருக்கும் இந்த படத்திற்கும் உண்மையிலேயே ஏதும் சம்மந்தம் இருக்கலாம் என்பது படம் வந்தால் தான் தெரியும்.

 Sibirajs Ranga to be released in February

இந்த படத்தை வினோத்.டிஎல் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சிபிராஜ், நிகிலா விமல் ,சதீஷ் மற்றும் சுஜாதா பாபு முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு ராம்ஜீவன் இசையமைத்து இருக்கிறார்.

இந்த படம் தற்போது பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. தணிக்கை குழு இந்த படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது .

 Sibirajs Ranga to be released in February

பொதுவாக யூ/ஏ சான்றிதழ் என்றால் படத்தை குழந்தைகளும் பார்க்கலாம் ஆனால் பெற்றோர் துணையுடன் அல்லது 18வயதிற்கு மேற்பட்டவர் துணையுடன் பார்க்கலாம் என்று பொருள். அப்படி என்றால் படத்தில் சிறிய அளவிளான வன்முறை காட்சிகளோ அல்லது 18வயதிற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் படத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.

 Sibirajs Ranga to be released in February

ரங்கா படம் வரும் காதலர் தினத்தில் அல்லது காதலர் தின வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. படக்குழு வெளியிட்ட இந்த போஸ்டரில் பிப்ரவரி வெளியீடு என்று மட்டும் குறிப்பிட்டுவுள்ளனர்.

 Sibirajs Ranga to be released in February

சிபிராஜ் இந்த படத்திற்கு பிறகு அதிரடி போலீஸாக வால்டர் படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு மாயோன் மற்றும் வட்டம் படத்தில் நடித்து வருகிறார். வட்டம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதுல்யா நடித்து வருகிறார் அவர்கள் இருவரின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டு ஆனது குறிப்பிடத்தக்கது.

 Sibirajs Ranga to be released in February

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X