குழந்தை கடத்தல்.. மிரட்டும் டிரைலர்.. மீண்டும் வந்த வால்டர்.. சிபிக்கு கிடைக்குமா வெற்றி?

சென்னை: இயக்குநர் அன்பு இயக்கத்தில், சிபிராஜ் நடிப்பில் உருவாகி உள்ள வால்டர் பட டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறும் குழந்தை கடத்தல் கும்பல் பற்றிய பகீர் விஷயங்கள் டிரைலரில் மிரட்டுகின்றன.

வால்டர் வெற்றிவேலாக சத்யராஜ் கலக்கி இருந்த நிலையில், வால்டர் டைட்டிலில் அவரது மகன் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ரிலீஸ்

நடிகர் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக மிரட்டும் வால்டர் பட டிரைலரை, நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வால்டர் டிரைலரை சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் சிபிராஜ் ரசிகர்கள் ட்விட்டரில் #Walter ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

குழந்தைகள் கடத்தல்

குழந்தைகள் கடத்தல்

ஒவ்வொரு 24 மணி நேரத்திலும், இந்தியாவில் 4 குழந்தைகள் காணாமல் போகின்றன என்றும், ஒவ்வொரு 16 மணி நேரத்திலும், தமிழ் நாட்டில் ஒரு குழந்தை காணாமல் போகின்றது என்றும் குழந்தைகள் கடத்தல் மாஃபியா குறித்த பயங்கரமான கான்செப்டுடன் வால்டர் படம் உருவாகி உள்ளது. டிரைலரில் வரும் காட்சிகள் பெற்றோர்களுக்கு பயத்தை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளன.

மிரட்டும் வில்லன்கள்

மிரட்டும் வில்லன்கள்

எந்த ஒரு படமும் ஹிட் ஆக வேண்டும் என்றால், அந்த படத்தில் ஹீரோவை விட வில்லன் ரோல் பலமாக இருக்க வேண்டும். அந்த வகையில், வால்டர் படத்தை இயக்கியுள்ள அன்பு கெட்டிக்காரர் என்றே சொல்ல வேண்டும். நட்டி நடராஜ் மற்றும் சமுத்திரகனியை மிரட்டல் வில்லன்களாக காட்டியுள்ள விதம் அருமை.

பிகில் ஸ்டைல்

பிகில் படத்தில் ராயப்பன் விஜய்க்கு, "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" எனும் எம்.ஜி.ஆர் பாடலை பயன்படுத்தி இருந்தார்கள். வால்டர் படத்தின் டிரைலர் ஆரம்பத்தில் அதே போல, "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா" என்ற எம்.ஜி.ஆர் பாடலுடன் தான் டிரைலர் தொடங்குகிறது. இதே டைட்டிலில் சிவகார்த்திகேயன் தயாரித்து ரியோ நடித்த படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X