சிகா தேர்தல் முடிவுகள்: பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான அணி வெற்றி
சென்னை: நேற்று நடந்து முடிந்த ஒளிப்பதிவாளர் சங்கத் தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான நடுநிலை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சிகா எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது.நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணியுடன் நடந்து முடிந்த இந்தத் தேர்தலின் முடிவுகள் நேற்றிரவு வெளியாகியது.
போட்டியிட்ட 3 அணிகளில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான நடுநிலை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவரான என்.கே. விஸ்வநாதன் மற்றும் செயலாளர் ஃபெப்சி சிவா ஆகியோர் மீது, ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, 8 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சிகா தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தற்போது பதவியில் உள்ளவரான ஜி.சிவா தலைமையில் ‘சேவை அணி', பி.சி.ஸ்ரீராம் தலைமையில் ‘நடுநிலைஅணி', கே.வி.கன்னியப்பன் தலைமையில் 'ஆண்டவர்அணி' என்று 3 அணிகள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











