»   »  காதல் முறிந்தாலும் பெங்களூர் டேஸுக்காக ஒன்று சேரும் சித்து-சமந்தா

காதல் முறிந்தாலும் பெங்களூர் டேஸுக்காக ஒன்று சேரும் சித்து-சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர்களான சித்தார்த்தும், சமந்தாவும் பிரிந்துவிட்டாலும் பெங்களூர் டேஸ் தெலுங்கு ரீமேக்கில் ஒன்றாக நடிக்க உள்ளனர்.

நடிகர் சித்தார்த்தும், சமந்தாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்கள் தங்களின் காதலை ஒப்புக்கொள்ளாமலேயே ஜோடியாக வலம் வந்தனர். இந்நிலையில் சமந்தாவின் அதிரடி கவர்ச்சி சித்தார்த்தை கோபம் அடைய வைத்தது. சித்தார்த் கோபப்பட்டாலும் சமந்தா தொடர்ந்து கூடுதல் கவர்ச்சி காட்டி வருகிறார்.

இந்நிலையில் தான் சித்தார்த்தும், சமந்தாவும் பிரிந்துவிட்டனர்.

சித்தார்த்

சித்தார்த்

டிசியில் வந்த செய்தி நான் பாதிக்கப்பட்டவள் போன்று உள்ளது. நான் பாதிக்கப்பட்டவள் இல்லை. சித்தார்த் ஒரு சிறந்த மனிதர். இது தனிப்பட்ட விஷயம் என்று சமந்தா ட்வீட் செய்துள்ளார்.

பெங்களூர் டேஸ்

பெங்களூர் டேஸ்

பஹத் பாசில், நஸ்ரியா நடித்த மலையாள படமான பெங்களூர் டேஸின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சித்தார்த்தும், சமந்தாவும் ஒப்பந்தமாகியுள்ளனர். காதல் முறிந்தாலும் படத்திற்காக அவர்கள் ஒன்று சேர உள்ளனர்.

பேச்சு இல்லை

பேச்சு இல்லை

சமந்தாவும், சித்தார்த்தும் கடந்த ஒரு மாத காலமாக பேசிக் கொள்வதே இல்லையாம். இருந்தாலும் அதை எல்லாம் மறந்து பெங்களூர் டேஸில் நடிக்க உள்ளனர்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

பெங்களூர் டேஸ் ரீமேக்கின் படப்பிடிப்பு மார்ச் மாதம் 1ம் தேதி ஹைதராபாத்தில் துவங்குகிறது. சமந்தா தற்போதைக்கு படங்களில் முழுக்கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

சிம்பு-நயன்

சிம்பு-நயன்

முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் பழையவற்றை மறந்து பாண்டிராஜின் இது நம்ம ஆளு படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Siddharth and Samantha will work together for the telugu remake of malayalam movie Bangalore days inspite of their recent break-up.
Please Wait while comments are loading...