டெடி படத்தில் குறும்பா புகழ் சித் ஶ்ரீராம் பாடுகிறார்… இமான் ட்விட்

Recommended Video

Arya Sayeesha: ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய படம்

சென்னை : டெடி படத்தில் ஒரு பாடலுக்கு சித் ஶ்ரீராம் பாட இருப்பதாக டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சகோதரர் சித் ஶ்ரீராமுடன் பணியாற்ற போவது உற்சாகமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் டெடி .இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளிவந்தது. அதில் ஆர்யாவின் பின்னால் ஒரு கரடி பொம்மை நின்று எட்டி பார்ப்பது போல் அந்த போஸ்டர் வடிவமைக்க பட்டிருந்தது.

Sid Shriram sing in Teddy movie

இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் மேல் ஒரு குற்றச்சாட்டு எப்போதும் உண்டு அது அவர் பல ஹாலிவுட் படங்களை மையமாக வைத்தே படங்கள் எடுக்கிறார் என்பதாகும். இவர் இயக்கிய நாணயம் என்ற பெயரில் வெளிவந்த படம் வங்கி கொள்ளை பற்றியதாக இருந்தது. அடுத்ததாக மிருதன் இந்த படத்தில் அனைவரும் ஒரு வித நோயால் மிருகமாயி அனைவரையும் கொல்வது என்று அதீத கற்பனை செய்து இயக்கி இருந்தார் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படமான டிக் டிக் டிக் படத்தை இயக்கிய பெருமை இவரையே சேரும்.

இவரின் மிருதன் மற்றும் டிக் டிக் டிக் படங்களுக்கு இசையமைத்த டி.இமான், டெடி படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல பாடகரான சித் ஶ்ரீராம் ஒரு பாடலை பாட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சகோதரர் சித் ஶ்ரீராமுடன் பணியாற்ற போவது உற்சாகமாக உள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள பாடகர் சித்ஶ்ரீராம் எப்போதும் தங்களுடன் பணியாற்றுவது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தரும் என்று கூறியுள்ளார்.

சித் ஶ்ரீராம் டி.இமானின் கூட்டணியில் உருவான குறும்பா பாடல் மிக பெரிய ஹிட் பாடலாகும். டெடி படத்திலும் அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் நிச்சயம் ஒரு சூப்பர் ஹிட்டான பாடல் வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: imman இமான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X