மணிரத்னம் தயாரிக்கும் வானம் கொட்டட்டும்... இசையமைப்பாளரான சித் ஸ்ரீராம்

சென்னை: இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியிருக்கிறார். இந்தத் தகவலை சக்தி ஶ்ரீ கோபாலன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித் ஶ்ரீராமுடன் எடுத்த புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் தயாரித்து வரும் படம் தான் வானம் கொட்டட்டும். இந்த படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்து வருகிறார். விக்ரம் பிரபு கடைசியாக துப்பாக்கி முனை படத்தில் ஹன்சிகாவுடன் நடித்து இருந்தார்.

Sid Sriram Composer for Vaanam Kottatum Film

வானம் கொட்டட்டும் படத்தின் கதையை எழுதியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு பாக்யராஜ் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் விக்ரம் பிரபுக்கு தங்கையாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

வானம் கொட்டட்டும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனசேகரன். இப்படத்திற்காக பாடகராக இருந்து இசையமைப்பாளராக மாறி உள்ளார் பிரபல பின்னனி பாடகர் சித் ஶ்ரீராம். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் படத்தில் அடியே பாடலின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் சித் ஶ்ரீராம்.

இவர் அதற்குப் பின்னர், பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். இவர் பாட்டில் தனித்துவம் இருப்பதாக பலரும் கூறுவார்கள். இவர் பாடல்களுக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது மணிரத்னம் தயாரிக்கும் படத்திலே இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் .

இவர் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஒரு பாடலின் வேலை முடிவடைந்து உள்ளது. பிரபல பின்னணி பாடகியான சக்தி ஶ்ரீ கோபாலன் இப்பாடலை பாடி உள்ளார்.

இவர் சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய படமான செக்க சிவந்த வானம் படத்தில் கூட இரண்டு பாடல்களை பாடி இருந்தார். இந்தத் தகவலை சக்தி ஶ்ரீ கோபாலன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித் ஶ்ரீராமுடன் எடுத்த புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X