பிசாசு 2 படத்திற்காக சித் ஸ்ரீராம் பாடிய மொலோடி..வியந்து பாராட்டிய மிஷ்கின்!

சென்னை: ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை ராக் ஃபோர்ட் என்டேர்டைன்மெண்ட் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பாடல்கள் பதிவு குறித்து மிஷ்கின் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

பிரபல பாடகர்

பிரபல பாடகர்

சித் ஸ்ரீராம் பாடல்கள் பாடுவது மட்டுமன்றி சில படத்திற்கு இசையமைத்தும் வருகிறார். தனது மெல்லிய குரலால் பல பாடல்களை பாடி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். பாடிய பாடல்களும் ஹிட் அடிக்க தவறியதில்லை.

மிஷ்கின் இயக்கத்தில்

மிஷ்கின் இயக்கத்தில்

கடந்த வருடம் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் சித் ஸ்ரீராம் உன்ன நினைச்சு, நீங்க முடியுமா என இரண்டு பாடல்களை பாடி இருந்தார். இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடலாகும்.

பாராட்டிய மிஷ்கின்

பாராட்டிய மிஷ்கின்

இதை தொடர்ந்து மிஷ்கினுடன் மீண்டும் இணைந்துள்ளார் சித் ஸ்ரீராம். பிசாசு 2 படத்திற்காக மெலோடி பாடலை பாடிய சித் ஸ்ரீராமை மிஷ்கின் வியந்து பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் தொடர்ந்து அந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

முழு வீச்சில் படப்பிடிப்பு

முழு வீச்சில் படப்பிடிப்பு

பிசாசு 2 படத்தின் பாடல்கள் பதிவு வேலைகள் ஏற குறைய முடியும் நிலையில் உள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் முடிவுக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: mysskin sid sriram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X