சித் ஸ்ரீராமின் இசையில் முதல் பாட்டு.. எப்படி இருக்குன்னு கேட்டுப்பாருங்க?

Recommended Video

மெட்ராஸ் டாக்கீஸ் விளம்பரம் செய்வதில் மிராக்கிள் செய்வார்கள்

சென்னை: தமிழ், தெலுங்கு படங்களில் சமீப காலமாக சித் ஸ்ரீராமின் குரலில் ஒரு பாடல் இடம்பெற்றால் அது நிச்சயம் சூப்பர் ஹிட் பாடல் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், முதன்முறையாக விக்ரம் பிரபுவின் வானம் கொட்டட்டும் படத்தில் இசையமைப்பாளராக சித் ஸ்ரீராம் அப்கிரேட் ஆகியுள்ளார்.

அவரது இசையில் உருவாகியுள்ள முதல் பாடலை அவரது குருநாதர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது வெளியிட்டுள்ளார்.

வானம் கொட்டட்டும்

வாழ்க்கையில் சந்தோஷ மழை பெய்யட்டும் என்ற அழகான தமிழ் பொருளில் படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் வானம் கொட்டட்டும் படம் குடும்ப உறவுகளை ஆழமாகவும், இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப அழுத்தமாகவும் சொல்லியுள்ள படமாக வானம் கொட்டட்டும் உருவாகி வருகிறது.

யார் யார்

யார் யார்

விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா சபாஸ்டியன் என வானம் கொட்டட்டும் படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே சத்தமின்றி நடித்து முடித்துள்ளது. நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்திலும் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஸ்லோ பாய்ஸன்

ஸ்லோ பாய்ஸன்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வரும் பல மெலோடி பாடல்கள் ஸ்லோ பாய்ஸன் என அழைக்கப்படும். அதேபோல, அவரது சிஷ்யரான சித் ஸ்ரீராம் குரலில் ஒலிக்கும் ஒவ்வொரு பாடல்களும் ஸ்லோ பாய்ஸனாக இருக்கும். இந்நிலையில், வானம் கொட்டட்டும் படத்திற்கு இசையையும் அவரே அமைத்துள்ளதால், படம் முழுக்க ஸ்லோ பாய்ஸன் எஃபெக்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்டு எப்படி இருக்கு?

சித் ஸ்ரீராம் இசையில், சித்ஸ்ரீராம், சக்தி ஸ்ரீ கோபாலன் குரலில் "கண்ணு தங்கம்" பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, சரத்குமார் மற்றும் ராதிகா பாடும் டூயட்டாக இந்த பாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லிரிக் வீடியோ என்பதால், படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் அனைவரையும், காட்டியுள்ளனர். சிவா ஆனந்த் வரிகளில் கிராமிய மனமும், கணவன், மனைவி பாசமும் சித் ஸ்ரீராமின் தாலாட்டும் இசையில், மெய்மறக்கச் செய்கிறது. மறக்காம கேட்டுப்பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X