மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர்... 31வது பிறந்தநாள் கொண்டாட்டம்... பாடல் வெளியிட்ட சித் ஸ்ரீராம்

சென்னை : மயக்கும் குரலுக்கு சொந்தக்காரரான பாடகர் சித் ஸ்ரீராம் தன்னுடைய 31வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.

அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், பிறந்தநாளையொட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர்

மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர்

தென்னிந்திய மொழி படங்களின் முக்கிய பாடகர்களில் ஒருவராக மாறியுள்ளார் சித் ஸ்ரீராம். மயக்கும் குரலுக்கு சொந்தக்காரரான இவரது பாடல்களுக்காக ரசிகர்கள் தவம் இருக்கிறார்கள். மியூசிக் டைரக்டர்களும் காத்திருந்து பாடலை பெற்று வருகின்றனர்.

பாடல் வீடியோ பகிர்வு

பாடல் வீடியோ பகிர்வு

இந்நிலையில் ஸ்ரீராம் தனது 31வது பிறந்ததினத்தை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. இனிய தனிமையே பாடலின் வரிகளை குறிப்பிட்டு ஸ்டூடியோ கிரீன் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. அந்த பாடலின் வீடியோவையும் பகிர்ந்துள்ளது.

'ஐ' பட பாடல் வீடியோ வெளியீடு

இதேபோல அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அவர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் ஐ படத்தின் என்னோடு நீயிருந்தால் பாடலையும் பாடி அதன் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இசையால் கிடைத்த வரம்

இசையால் கிடைத்த வரம்

மேலும் வித்தியாசமான நேரத்தில் நாம் அனைவரும் வாழ்ந்துவரும் நிலையில் அனைவரும் தனக்கு கொடுத்துவரும் பாசிட்டிவ் எனர்ஜி மிகவும் சிறப்பானது என்றும் தெரிவித்துள்ளார். அனைவருடனும் இசையால் இணைந்துள்ளது தனக்கு கிடைத்த வரம் என்றும் கூறியுள்ளார். மேலும் கடந்த 2013-14ல் பதிவு செய்யப்பட்ட ஐ பட பாடலை பகிர்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X