பாலிவுட் கிசுகிசு : பிரபல நடிகருடன் ஊர் சுற்றும் அமிதாப் பச்சனின் பேத்தி.. கண்டிக்கும் தாத்தா!

மும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பேத்தி பிரபல நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்து வருகிறார்.

அமிதாப்பச்சன் மகள் ஸ்வேதா பச்சன் மற்றும் நிகில் நந்தா தம்பதியின் மகள் தான் நவ்யா நந்தா.

எஸ்கார்ட்ஸ் நிறுவன இயக்குனரான இவரது தந்தை நிகில் நந்தாவைப் போல் நவ்யா நந்தாவும் ஆரா ஹெல்த் கேர் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பிரபல அழகு சாதன பிராண்ட் ஒன்றுக்கு விளம்பர மாடலாக நடித்துள்ளார்.

அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா நந்தா

அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா நந்தா

அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா நந்தா சமீபத்தில் மாதவிடாய் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக பேசி இருந்தார். தனது தாத்தாவின் முன்னிலையில் மாதவிடாய் குறித்து இவர் பேசியதால் தலைப்பு செய்தியிலும் இவரின் பெயர் அடிபட்டது. தற்போது இவர் பிரபல நடிகர் சித்தார்த் சதுர்வேதியுடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

போன் பூட்

போன் பூட்

பாலிவுட் நடிகரான சித்தாத் சதுர்வேதி 'போன் பூட்' என்ற நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார். வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று கல்லாக்கட்டி வருகிறது. இப்படத்தில் கத்ரீனா கைஃப், ஜாக்சி செராஃப், ஷீபா சத்தா, இஷான் கட்டர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஏடாகூட கேள்வி

ஏடாகூட கேள்வி

போன் பூட் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சித்தார்த் சதுர்வேதியிடம், நவ்யா நந்தா காதல் விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு "நான் டேட்டிங் செல்கிறேன் " என்று மறைமுகமாக பதிலளித்து விட்டு அமைதியாகிவிட்டார்.

மீடியாவில் சிக்கிய காதல் ஜோடி

மீடியாவில் சிக்கிய காதல் ஜோடி

சித்தாந்த் மற்றும் நவ்யாவும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கரண் ஜோஹரின் பிறந்தநாள் விழாவில் இந்த ஜோடி தனித்தனியாக வந்தாலும், விழாவில் இருவரும் இணைந்தே இருந்ததால், மீடியாவின் கண்ணில் வசமாக சிக்கினர். இவர்களின் காதல் விவகாரம் தாத்தாவுக்கு தெரிந்ததால் அவர் இவர்களை கண்டித்துள்ளார். இதனால், இருவரும், தங்கள் காதல் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கின்றனர்.

கெஹ்ரையான் படத்தில்

கெஹ்ரையான் படத்தில்

வளர்ந்து வரும் நடிகரான சித்தார்த் சதுர்வேதி தீபிகா படுகோனேவுடன் இணைந்து 'கெஹ்ரையான்' திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். விவகாரமான காதல் கதையை கொண்ட இப்படத்தில் ஏராளமான லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார். ஓடிடியில் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X