அஜித் என்ன உன் தம்பியா?: ட்விட்டரில் சித்தார்த்தை விளாசிய தல ரசிகர்கள்
Recommended Video
சென்னை:ஐ.பி.எல். இறுதிப் போட்டி தொடர்பாக ட்வீட் செய்த சித்தார்த்துக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையே ட்விட்டரில் மோதல் நடந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல். இறுதிப் போட்டி நேற்று நடந்தது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் சித்தார்த் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை பாராட்டி ட்வீட் போட்டார். அதை பார்த்த அஜித் ரசிகர் ஒருவரோ, ஏன்யா வாய் கூசாமல் பொய் சொல்ற, அவங்க உழைப்பை நம்பியா ஜெயிக்கிறார்கள் என்று கேட்டார்.
தல ரசிகர் போட்ட கமெண்ட்டை பார்த்த சித்தார்த்தோ, அஜித்தை மதித்தால் கடின உழைப்பை மதிக்க கற்றுக் கொள்க. இல்லை என்றால் அப்படி ஒரு கூல் ரோல் மாடல் இருந்தும் பலனில்லை என்று பதில் அளித்தார்.
அஜித்தை அஜித் சார் என்று மரியாதையுடன் அழைக்க கற்றுக் கொள்ளுமாறு ரசிகர் ஒருவர் தெரிவிக்க சித்தார்த் ஆஹான் என்று வடிவேலு பாணியில் கமெண்ட் போட்டார்.
நீங்களே அஜித் சாரிடம் போய் பேசினாலும் நீங்கள் ஜூனியர் என்றும் பாராமல் அவர் உங்களை சார் என்று தான் அழைப்பார் என மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











