PS1 audio launch: ஒரே காரில் ஜோடியா வந்த அதிதி ராவ்-சித்தார்த்..ஓ கதை அப்படி போகுதோ!

சென்னை : பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு ஒரே காரில் ஜோடியா அதிதி ராவ்-சித்தார் வந்தது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகர் சித்தார்த்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் படங்களை தவிர்த்து சமூக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் அவ்வப்போது சிக்கிக் கொள்வார்.

180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் காவிய தலைவன் திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலைநிறுத்திக் கொண்டார் நடிகர் சித்தார்த்.

மகா சமுத்திரம்

மகா சமுத்திரம்

நடிகர் சித்தார், தமிழ், தெலுங்கு இருமொழியில் உருவானத் திரைப்படம் மகா சமுத்திரம் படத்தில் அதிதி ராவ் ஹைதாரியும் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திலேயே இருவரும் காதலித்து வந்ததாக செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. அதிதி ராவும் சித்தார்த்தும் அடிக்கடி டேட்டிங் சென்று வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

காதலா?

காதலா?

அதுமட்டும் இல்லாமல், மகா சமுத்திரம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளின் போது இருவரும் வெளியூர்களுக்கு ஒரே காரில் தான் ஒன்றாக பயணம் செய்ததாகவும், பல இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றி வருவதாகவும், அடிக்கடி பார்ட்டி மற்றும் விழாக்களில் ஜோடியாக கலந்து கொள்வதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிதியும் சித்தார்த்தும் இதுவரை வெளிப்படையாக எதையும் தெரிவிக்காமல் மௌமாகவே உள்ளனர்.

ஜோடியா வந்தனர்

ஜோடியா வந்தனர்

இந்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு அதிதி மற்றும் சித்தார்த் இருவரும் ஜோடியாக ஒரே காரில் வந்து இறங்கினார்கள். இதனால், மீடியா கண்ணில் இருவரும் வசமாக சிக்கி விட்டனர். இதையடுத்து, இருவரையும் ஒன்றாக போட்டோ எடுக்க அழைத்த போது, சித்தார்த்,அதிதியை நீ போ என்பது போல சைகைகாட்டினார். இதையடுத்து இருவரும் தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொண்டனர்.

நாம் அனைவரின் நிஜம்

நாம் அனைவரின் நிஜம்

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த், கல்கி அவர்களின் படைப்பு..மணிரத்னம் அவர்களின் கற்பனை.. நாம் அனைவரின் நிஜம்.இது நாங்கள் படிச்ச பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்தின் கனவு. மணிரத்தினம் அவர்கள் ஒருமிகப்பெரிய படைப்பை திரையில் கொண்டு வர மிகப்பெரிய உழைப்பை கொடுத்து இருக்கிறார். உங்களைப் போல நாங்கங்களும் இந்த படத்தை திரையில் காண காத்திருக்கிறோம் என்றார்.

ஓ கதை அப்படி போகுதா

ஓ கதை அப்படி போகுதா

சித்தார் பேசி முடிக்கும் வரை காத்திருந்த அதிதி ராவ், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு இணைந்தே சென்றனர். இதைப்பார்த்த ரசிகர்கள் அடுத்த நட்சத்திர ஜோடி இவங்கதான் என்றும், ஓ கதை அப்படி போகுதா என்று கேட்டு கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். எது எப்படியோ நமக்கு கன்டென்ட் கிடைச்சா சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X