இந்தியன் 2 ஆடியோ லாஞ்சுக்கு டாட்டா காட்டிட்டு இத்தாலியில் சித்தார்த் - அதிதி என்ன பண்றாங்க பாருங்க!

சென்னை: இந்தியன் 2 படத்தின் ஆடியோ லாஞ்சில் பங்கேற்காமல் தான் நிச்சயம் செய்துக் கொண்ட நடிகை அதிதி ராவுடன் இத்தாலியில் உள்ள டஸ்கனி எனும் இடத்தில் இன்பச்சுற்றுலா சென்றுள்ளார். இந்தியன் 2 படம் என்ன ஆனால், எனக்கென்ன என்கிற எண்ணத்தில் தான் சித்தார்த் அப்படி சென்று விட்டாரா என ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்த பல பிரபலங்களே விசாரிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரம்மானந்தம் உள்ளிட்ட இந்தியன் 2 நடிகர்கள் பலர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்ததுடன் மட்டுமின்றி படத்தை பற்றியும் தங்கள் நடிப்பை பற்றியும் சில வார்த்தைகள் பேசிவிட்டு விழா மேடைக்கு சென்றனர்.

Siddharth and Aditi Rao enjoys cycle ride at Tuscany

லைகா சுபாஸ்கரன், ஷங்கர், அனிருத், சிம்பு, லோகேஷ் கனகராஜ், மற்றும் நெல்சன் உள்ளிட்ட பிரபலங்களும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர்.

இத்தாலியில் சித்தார்த்: நடிகர் சித்தார்த் இந்த படத்தில் இந்தியன் தாத்தாவின் பேரனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சந்துரு கமலுக்கும் மனிஷா கொய்ராலாவுக்கு குழந்தை பிறந்தது என்றும் அந்த குழந்தை தான் சித்தார்த் என்றும் கூறுகின்றனர். படம் வந்தால் தான் உண்மை தெரியவரும். இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்காமல் தனது வருங்கால மனைவி அதிதியுடன் இப்பவே ப்ரீ ஹனிமூன் புறப்பட்டு சென்று விட்டார் சித்தார்த்.

அதிதி ராவுடன் சைக்கிளிங்: நடிகர் சித்தார்த் தனது வருங்கால மனைவி அதிதி ராவுடன் இத்தாலியில் உள்ள டஸ்கானி எனும் இடத்தில் சுற்றுலா செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது 10 கி.மீ., இருவரும் சைக்கிள் ஓட்டும் வீடியோவை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சித்தார்த் எடுத்த வீடியோ: அதிதி ராவ் சைக்கிள் ஓட்டும் வீடியோவை சித்தார்த்தே சைக்கிள் ஓட்டிக் கொண்டு ஒற்றை கையில் எடுத்துள்ளதாக அதிதி ராவ் கூறியுள்ளார். கூட யாரும் போட்டோகிராஃபரை கூட்டிட்டு போகலையா என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கிண்டலடித்து வருகின்றனர். இந்தியன் 2 படத்தில் பாரா மற்றும் தாத்தா வராரு பாடல்கள் மட்டுமே கமல்ஹாசனுக்கு இருக்கும் என்றும் மற்ற பாடல்கள் சித்தார்த்துக்குத்தான் என்பதால் தான் ஷங்கர் அனிருத்தை தேர்வு செய்தார் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X