எதே சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் செய்யலையா?.. அப்போ அவர் சொன்னது என்ன ஆச்சு?

சென்னை: சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதாக ஒட்டுமொத்த ஊடகங்களிலும் செய்திகள் தீயாக பரவி வரும் நிலையில், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றும் திருமண விழா ஒன்றுக்கு சென்றுள்ளனர் என்றும் சில தகவல்கள் பரவத் தொடங்கி உள்ளன.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பேருந்தில் பயணிக்கும் பயணியாக சினிமா வாழ்க்கையை தொடங்கிய சித்தார்த் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

Siddharth and Aditi Rao still not yet married

மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் அடுத்து வெயிட்டான கதாபாத்திரத்தில் சூர்யா மற்றும் மாதவன் உடன் இணைந்து நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் சித்தார்த்துக்கு குவிந்தது. ஏகப்பட்ட நடிகைகளும் சித்தார்த் மீது காதல் வயப்பட்டதாக கிசுகிசுக்கள் பரவின.

சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்: தெலங்கானாவின் வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் நேற்று காலை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. நாடு முழுவதும் தீயாக இந்த செய்தி பரவி அனைத்து ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உறுதி செய்த ஹோஸ்ட்: நெட்பிளிக்ஸில் விரைவில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள ஹீராமந்தி வெப்சீரிஸ் ரிலீஸ் ஆகிறது. அதன் அறிமுக விழாவுக்கு வருவதாக சொல்லியிருந்த அதிதி ராவ் கடைசி நேரத்தில் வரவில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் சச்சின் கும்பார் அதிதி ராவ் ஏன் இன்று இங்கே வரவில்லை என்பது எனக்குத் தெரியும். அவர் தனது நீண்ட நாள் காதலர் சித்தார்த்தை இன்று திருமணம் செய்துக் கொண்டார் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்த நிலையில், தான் அனைவரும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளனர்.

திருமணமே நடக்கலையா?: இந்நிலையில், சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றும் அதிதி ராவின் உறவினர் திருமணத்துக்குத்தான் சித்தார்த் சென்றிருக்கிறார் என்றும் வேறு சில தகவல்களும் உலா வருகின்றன. இதில், எதை நம்புவது என்றே தெரியாமல் ரசிகர்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவை டேக் செய்து உண்மை என்ன? எனக் கேட்டு வருகின்றனர். ஆனால், இருவரும் இந்த விவகாரத்தில் அமைதியோ அமைதி என்கிற மோடில் தான் இதுவரை உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X