இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவை புறக்கணித்த சித்தார்த்.. இப்படியொரு பஞ்சாயத்து போகுதா?.. நியாயமா?
சென்னை: இந்தியன் 2 படத்தின் இன்னொரு நாயகனாகவே நடித்துள்ள சித்தார்த் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
அந்த படத்தில் நடித்துள்ள கமல்ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்ததுடன் மட்டுமின்றி படத்தை பற்றியும் தங்கள் நடிப்பை பற்றியும் சில வார்த்தைகள் பேசிவிட்டு விழா மேடைக்கு சென்றனர்.

லைகா சுபாஸ்கரன், ஷங்கர், அனிருத், சிவகார்த்திகேயன், சிம்பு, லோகேஷ் கனகராஜ், எச். வினோத் மற்றும் நெல்சன் உள்ளிட்ட பிரபலங்களும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர்.
இந்தியன் 2 ஆடியோ லாஞ்சை தவிர்த்த சித்தார்த்?: நடிகர் சித்தார்த் இந்த படத்தில் இந்தியன் தாத்தாவின் பேரனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டில் நடக்கும் ஊழலுக்கு எதிராக தனியாளாக அவர் போராடிக் கொண்டிருக்க அவருக்கு உதவி செய்யும் விதமாகத்தான் இந்தியன் தாத்தா மீண்டும் இந்தியா வருவது போல இந்தியன் 2 கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சித்தார்த்துக்கு பாய்ஸ் படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு வராமல் ஏன் தவிர்த்தார் என்கிற கேள்வியை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா வட்டாரத்தில் பலரும் எழுப்பி வருகின்றனர்.
அதிதியுடன் ஜாலி டூர்: நடிகர் சித்தார்த் இந்தியாவிலேயே இல்லை என்றும் நடிகையும் அவரது வருங்கால மனைவியுமான அதிதி ராவுடன் இத்தாலியில் உள்ள டஸ்கானி எனும் இடத்தில் சுற்றுலா செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு கமல்ஹாசன் ரசிகர்களை மேலும், வெறுப்பேற்றி வருவதாக பலரும் சித்தார்த்தை திட்டி வருகின்றனர்.

கமலுடன் போட்டி?: நடிகர் கமல்ஹாசனுக்கு இணையாக தனக்கும் புரமோஷன்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சித்தார்த் கூறியதாகவும் லைகா மற்றும் ஷங்கர் அதை ஏற்க மறுக்காத நிலையில் தான் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவையே புறக்கணித்து தனது எதிர்ப்பை சித்தார்த் காட்டியுள்ளதாக கூறுகின்றனர்.
சித்தா வெற்றி: கடந்த ஆண்டு சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா திரைப்படம் வெற்றிப் பெற்ற நிலையில், சித்தார்த் ரொம்பவே ஈகோ பார்ப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. வெளிநாட்டுக்கு செல்லும் கமிட்மென்ட்டில் மாட்டிக் கொண்டதால் இந்தியன் 2 இசை வெளியீட்டுக்கு வர முடியவில்லை என சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், சித்தார்த் வேண்டும் என்றே இசை வெளியீட்டு விழாவை தவிர்த்துள்ளார் என்றே பலரும் அவரை திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











