»   »  சமந்தாவின் காதலுக்கு வேட்டு வைத்த ஓவர் கவர்ச்சி

சமந்தாவின் காதலுக்கு வேட்டு வைத்த ஓவர் கவர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் ஜோடியான நடிகர் சித்தார்த்தும், நடிகை சமந்தாவும் காதலை முறித்துக் கொண்டுள்ளார்களாம்.

சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் காதலித்து வந்தனர். அவர்களுக்கு விரைவில் திருமணம் என்று எல்லாம் செய்திகள் வெளியாகின. ஜோடி போட்டு அவர்கள் கோவில், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போதிலும் காதல் பற்றி மட்டும் வாய் திறக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் அண்மை காலமாக சமந்தா படங்களில் ஓவராக கவர்ச்சி காட்டி வருவது சித்தார்த்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். இருப்பினும் சமந்தா தொடர்ந்து கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

பிரிவு

பிரிவு

கவர்ச்சி விவகாரத்தால் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்று பல மாதங்களுக்கு முன்பே கூறப்பட்டது. ஆனால் சமந்தா சித்தார்த்தின் எனக்குள் ஒருவன் இசை நிகழ்ச்சிக்கு வந்து நாங்கள் பிரியவில்லை என்பதை சொல்லாமல் சொன்னார்.

சித்தார்த்

சித்தார்த்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்தார்த்தும், சமந்தாவும் பிரிந்துவிட்டார்களாம். இனியும் ஒத்துவராது என்று சித்தார்த் கூறிவிட்டாராம். சித்தார்த்தை திருமணம் செய்யும் எண்ணத்தில் இருந்த சமந்தாவால் இந்த பிரிவை ஏற்க கடினமாக உள்ளதாம்.

சமந்தா

சமந்தா

காதல் முறிந்து போன சோகத்தை மறக்க சமந்தா படங்களில் முழு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம்.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

சித்தார்த் தனது மனைவியை விட்டு பிரிந்த பிறகு பாலிவுட் நடிகை சோஹா அலி கான் மற்றும் ஸ்ருதி ஹாஸன் ஆகியோரையும் காதலித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Love birds Siddharth and Samantha have reportedly parted their ways couple of months ago.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil