செம்பு இருக்கட்டும் முதலில் கொலையை பற்றி பேசுங்கள்: சத்குருவுக்கு சித்தார்த் கண்டனம்

By Siva

Recommended Video

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பேசிய சத்குருவை திட்டிய சித்தார்த்- வீடியோ

சென்னை: காப்பர்(செம்பு) உருக்காலை பற்றி ட்வீட்டிய சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில் காப்பர் உருக்காலை பற்றி சத்குரு ஜக்கிவாசுதேவ் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

சத்குரு

காப்பர் உருக்குவது பற்றி பேச நான் நிபுணர் இல்லை. ஆனால் இந்தியாவுக்கு அதிக அளவில் காப்பர் தேவைப்படுகிறது என்று எனக்கு தெரியும். நாம் காப்பரை தயாரிக்கவில்லை என்றால் சீனாவிடம் இருந்து தான் வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் விதிமீறல்களை சட்ட ரீதியாக அணுக வேண்டும். பெரிய வியாபாரத்தை முடக்குவது பொருளாதார தற்கொலையாகும் என்று சத்குரு ட்வீட்டினார்.

சித்தார்த்

சத்குருவின் ட்வீட்டை பார்த்த சித்தார்த் பதில் அளித்திருப்பதாவது, முதல்வர் அலுவலகம் ஒரு வெட்கக்கேடு. பிரதமர் யோகாவை தவிர வேறு எது பற்றியும் பேச மாட்டார். காப்பர் உருக்குவதின் பலன்களை பற்றி பேச இது சிறந்த நேரம் இல்லை சத்குரு. மக்கள் போலீசாரால் கொல்லப்பட்டுள்ளனர். மக்களை சுடுவது கொலை ஆகும். கொலை பற்றி பேசுங்கள். தற்போது என்றார். #சமூகவிரோதிகள்

ஆதரவாளர்கள்

சித்தார்த்தின் ட்வீட்டை பார்த்துவிட்டு சத்குரு ஆதரவாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதை பார்த்த சித்தார்த் ரசிகர்கள் சத்குரு ஆதரவாளர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

பாராட்டு

பப்ளிசிட்டி தேட சும்மா எதையாவது சொல்லாதீர்கள் என்று சித்தார்த்தை திட்டுவோர் திட்டினாலும் தில்லாக கேட்கிறீர்கள் ப்ரோ என்று பாராட்டுவோரும் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X