Siddharth - காதலிக்க கத்துக்கோங்க.. மாறி மாறி முத்தம் கொடுத்து சித்தார்த் பகிர்ந்த வீடியோ
சென்னை: நடிகர் சித்தார்த் கடைசியாக சித்தா படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அவரது நடிப்பும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அடுத்ததாக அவரது நடிப்பில் இந்தியன் 2 வெளியாகவிருக்கிறது. கமல் ஹாசனுடன் நடித்திருப்பதால் அந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். இந்தச் சூழலில் சித்தார்த் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆனால் படம் எதுவும் இதுவரை இயக்கவில்லை. தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடித்திருக்கிறார் அவர்.

ஓபன் டாக்: சித்தார்த்தை பொறுத்தவரை தனக்கு மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர். குறிப்பாக அரசாங்கம் ஏதேனும் தவறு செய்தால் யாருக்கும் அஞ்சாமல் ட்வீட்டும் போடுவார்.அப்படி அவர் பதிவு செய்திருந்த பல ட்வீட்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அமைதியாக இருந்துவருகிறார் சித்தார்த்.
டக்கர்: திறமையான நடிகர் என்று பெயர் எடுத்தாலும் இதுவரை பெரிய ஹிட் எதுவும் கொடுக்காமல் இருக்கிறார் சித்தார்த். அவரது நடிப்பில் கடைசியாக டக்கர் என்ற படம் வெளியானது. கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சித்தார்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இந்தப் படமும் அவர் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை. இதனால் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறார்.

இந்தியன் 2: இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகயிருக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார் சித்தார்த். இந்தப் படத்தின் மூலமும் தனக்கு பெரிய பிரேக் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறார். இருந்தாலும் சோலோ ஹீரோவாக ஒரு மெகா ஹிட்டடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருக்கிறது. இந்தச் சூழலில் அவர் அருண் குமார் இயக்கத்தில் சித்தா படத்தில் நடித்தார்.
பெரும் ஹிட்: படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இயக்குநரின் மேக்கிங் ஒருபுறம் சிறப்பாக இருக்க சித்தார்த்தின் நடிப்பு மறுபக்கம் அட்டகாசமாக இருக்கிறது என்று ரசிகர்கள் புகழ்ந்தனர். மேலும் சாமானிய ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தங்களது பாராட்டை தெரிவித்தனர். அதன்படி கமல் ஹாசன், மணிரத்னம், ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டினர்.
காதல்: இதற்கிடையே சித்தார்த் காதல் கிசுகிசுவில் அவ்வப்போது சிக்கிக்கொள்பவர். முதலில் சமந்தாவுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட அவர் இப்போது நடிகை அதிதியுடன் இணைத்து பேசப்படுகிறார். இருவரும் ஜோடியாகவே வெளியில் செல்கின்றனர். இருப்பினும் தாங்கள் காதலிக்கிறோமா இல்லையா என்பது குறித்து எந்த விதமான கருத்தையும் இதுவரை தெரிவிக்காமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்" என வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் தனது செல்ல நாய்க்கு தொடர்ந்து முத்தம் கொடுக்கும்படி காட்சிகள் இருக்கின்றன. மேலும், 'காதல் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொடுக்கும். உங்களுக்கு உதவும். வாழ்வதற்காக காதலியுங்கள். காதல்தான் வாழ்க்கையில் எல்லாம்" எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











