இதுதான் என்னோட ஃபர்ஸ்ட் படம்.. திடீரென மேடையில் கண்கலங்கிய சித்தார்த்.. காப்பாற்றுமா சித்தா..?

சென்னை: இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள சித்தா திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது மேடையில் உணர்ச்சிவசப்பட்டு கண்கள் குளமானபடியே சித்தார்த் பேசியது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

விஜய்சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் அருண் குமார் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். நிமிஷா விஜயன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Siddharth literaly cried while speaking about his upcoming movie Chithha

போக்சோ சட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தின் கதை ரொம்பவே சிக்கலாக இருந்தாலும், சொல்லப்பட வேண்டிய கதை என படத்தை பார்த்த பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

லக்கே இல்லை: ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமான சித்தார்த் பல தரமான படங்களில் நடித்தும் தமிழில் அவருக்கு எதுவுமே பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை என்பது தான் வருத்தமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கமர்ஷியல் சக்சஸ் கிடைக்காமல் பல ஆண்டுகளாக போராடி வரும் சித்தார்த் தனது தயாரிப்பில் நடித்துள்ள படம் தான் இந்த சித்தா. வரும் செப்டம்பர் 28ம் தேதி சந்திரமுகி 2 மற்றும் இறைவன் உள்ளிட்ட படங்களுடன் ஒரே நாளில் வெளியாகிறது.

குவியும் பாராட்டுக்கள்: அண்ணன் இறந்து விட அண்ணி மற்றும் அவரது மகளுடன் அன்பாகவும் பாசமாகவும் வளர்ந்து வரும் ஈஸ்வரனை அண்ணனின் மகள் சித்தப்பா என அழைக்காமல் செல்லமாக சித்தா என அழைத்து வருகிறது. அந்த சிறுமிக்கு நடக்கும் கொடுமையான விஷயத்தில் சித்தார்த் சிக்க அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பது தான் கதை என்கின்றனர். படத்தை பார்த்த பல இயக்குநர்களும் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

Siddharth literaly cried while speaking about his upcoming movie Chithha

சமீபத்தில், மணிரத்னம் படத்தை பார்த்து விட்டு பாராட்டினார் என்றும் கமல் சார் தட்டிக் கொடுத்தார் என்றும் பேசிய சித்தார்த் அடுத்ததாக ஷங்கர் சாருக்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கும் போட்டுக் காண்பிக்க உள்ளதாக கூறினார்.

கண்கலங்கிய சித்தார்த்: 20 வருஷமா நடிச்சிட்டு இருக்கேன். ஆனால், இதுதான் என்னை முழுமையான நடிகனாக மாற்றியுள்ளது என உணர்கிறேன். இதுதான் என் ஃபர்ஸ்ட் படம் என பேசும் போதே நடிகர் சித்தார்த்தின் கண்கள் குளமாகி விட்டன. கலங்கிய கண்களுடன் தொடர்ந்து சித்தா படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றும் இது தியேட்டருக்காக உருவாக்கப்பட்ட படம் தான், நிச்சயம் குடும்பத்துடன் வந்து பாருங்க என கோரிக்கை வைத்துள்ளார்.

மார்க் ஆண்டனி போல சோலோ ரிலீஸ் இல்லாமல் பலத்த போட்டியுடன் சித்தா வெளியாக உள்ள நிலையில், சித்தார்த்துக்கு இந்த முறையாவது வெற்றி கிடைக்குமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X