Kiara Advani Wedding: கன்னத்தில் நச்சென ஒரு முத்தம்.. பிரம்மாண்டமாக நடந்த கியாரா அத்வானி திருமணம்!

மும்பை: பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானியின் ராயல் வெட்டிங் நேற்று மாலை ஜெய்சல்மாரில் உள்ள பழம்பெரும் அரண்மனையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

அதன் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளன. கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா திருமண கோலத்தில் ஜொலிக்கும் காட்சிகளும் இருவரும் தங்களுக்குள் முத்தமழை பொழிந்த காட்சிகளும் வெளியாகி உள்ளன.

பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

சித்தார்த் - கியாரா திருமணம்

சித்தார்த் - கியாரா திருமணம்

பாலிவுட்டில் தொடர்ந்து நட்சத்திர ஜோடிகள் திருமணம் செய்து வருகின்றனர். கத்ரீனா கைஃப் - விக்கி கவுஷல், ரன்பீர் கபூர் - ஆலியா பட் தொடர்ந்து தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி திருமணம் நேற்று மாலை ஜெய்சல்மாரில் உள்ள பிரபல அரண்மனையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அதன் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

பிங்க் நிற திருமண உடை

பிங்க் நிற திருமண உடை

பிரபல பாலிவுட் ஃபேஷன் டிசைனர் மணிஷ் மல்ஹோத்ரா டிசைன் செய்த பிங்க் நிற திருமண உடையில் மணமக்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் மணமேடையை அலங்கரித்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்ணை பறிக்கும் வண்ணம் உள்ளன.

முத்த மழை

முத்த மழை

தாலி கட்டியதும் மனைவி கியாரா அத்வானி கன்னத்தில் கணவர் சித்தார்த் மல்ஹோத்ரா முத்தம் கொடுத்தும் கணவர் சித்தார்த் கன்னத்தில் கியாரா முத்தம் கொடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை பறிமாறிக் கொண்ட அற்புத தருணங்கள் அடங்கிய புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

டிரெண்டாகும் திருமண புகைப்படங்கள்

டிரெண்டாகும் திருமண புகைப்படங்கள்

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி திருமணம் பிப்ரவரி 6 என முதலில் தகவல் வந்த நிலையில், பிப்ரவரி 7ம் தேதி தான் கியாரா அத்வானி கழுத்தில் சித்தார்த் தாலி கட்டுகிறார் என்கிற தகவல் வெளியானது. திருமண புகைப்படங்கள் கிடைத்து விடாதா என வட மாநில மீடியாக்கள் வலை வீசி வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ள திருமண புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

பாலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்தியா முழுக்க ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

ஷங்கர் சென்றாரா

ஷங்கர் சென்றாரா

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் ஆர்சி 15 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் கியாரா அத்வானி. இந்நிலையில், கியாரா அத்வானியின் திருமணத்திற்கு இயக்குநர் ஷங்கர், ராம்சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனரா என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ள நிலையில், ஷங்கர் கலந்து கொள்ளவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X