ரியா பிரிந்ததால் சுஷாந்த் அழுதே மயக்கமானார்.. மறுநாள் தற்கொலை செய்து கொண்டார்.. நண்பர் திடுக் தகவல்!
மும்பை: சுஷாந்த் தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் நடந்த பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவரது நண்பரான சித்தார்த் பிதானி தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை விவகாரம் சூடுபிடித்து வருகிறது. சுஷாந்தின் மரணத்திற்கு அவரது காதலி ரியா சக்ரபர்த்திதான் காரணம் என சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக சுஷாந்தின் தந்தை அளித்த புகாரின் பேரில் ரியா சக்ரபர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சுஷாந்துடன் ஒன்றாக வசித்தவரும் அவருடைய நண்பருமான சித்தார்த் பிதானி பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

மேனேஜர் தற்கொலை
அதாவது, சுஷாந்தின் முன்னாள் மேனேஜரான திஷா ஜூன் 8ஆம் தேதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திஷா தனது காதலருடன் இருக்கும் போதுதான் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது மரணத்திற்கு சுஷாந்துதான் காரணம் என்பது போல் செய்திகள் வெளியானது.

பிரிந்து சென்ற ரியா
இதனால் மிகுந்த கவலை கொண்டார் சுஷாந்த். திஷாவை தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன் என்று என்னிடம் கூறி அழுதார். அப்போதுதான் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி அவரை விட்டு பிரிந்து சென்றார். இதனை சுஷாந்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அழுதுகொண்டே இருந்தார்
அன்று முழுவதும் அழுதுக்கொண்டே இருந்தார். மறுநாளும் சுஷாந்து கதறியப்படி இருந்தார். ரியா பிரிந்து சென்றதை சுஷாந்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரொம்ப ஃபீல் பண்ணினார். அவர் எந்தளவுக்கு உடைந்து போனார் என்பதை நானும் அவரது சகோதரியும் நேரடியாக பார்த்தோம்.

ரியாதான் காரணம்
தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்த அவர், பின்னர் அப்படியே மயங்கி விட்டார். ரியா பிரிந்து சென்றதால் மனதளவிலும் உடலளவிலும் நொறுங்கி விட்டார் சுஷாந்த். அடுத்த நாள்தான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு ரியாதான் காரணம். இவ்வாறு சுஷாந்துடன் தங்கியிருந்த அவரது நண்பர் சித்தார்த் பிதானி தெரிவித்துள்ளார்.

முக்கியத்துவம் மிக்கது
சித்தார்த் பிதானியின் இந்த தகவல் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சுஷாந்தின் குடும்பத்தினர் ரியாதான் அவரது மரணத்திற்கு காரணம் என குற்றம்சாட்டி வருகின்றனர். அது தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் சித்தார்த் பிதானியின் இந்த தகவல் முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











