Takkar Box Office: போர் தொழில் படத்தை முதல் நாள் வசூலில் முந்திய டக்கர்.. சித்தார்த் சாதிப்பாரா?

சென்னை: நடிகர் சித்தார்த் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான டக்கர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல ஆண்டுகள் கழித்து சித்தார்த் நடித்த டக்கர் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான நிலையில், தமிழை விட தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பு படத்திற்கு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.

Siddharths Takkar movie Day 1 Box Office reports are here

அசோக் செல்வன், சரத்குமாரின் போர் தொழில் படத்தை விட முதல் நாள் இந்த படம் தான் அதிக வசூலை ஈட்டியுள்ளதாம்.

சித்தார்த்தின் டக்கர்: கார்த்திக் ஜி. க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கவுசிக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான டக்கர் திரைப்படம் கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது.

கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இந்த படம் கோலிவுட்டை விட டோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்கின்றனர். பணத்தை தேடி ஓடும் நாயகனும் பணம் வேண்டாம் என ஒதுங்கும் நாயகியும் சந்தித்தால் என்ன ஆகும் என்பது தான் இந்த படத்தின் கதை.

முதல் நாள் வசூல்: சித்தார்த்தின் டக்கர் படத்தில் காமெடி காட்சிகள், பாடல்கள், ரொமான்ஸ், லிப் கிஸ் என இளைஞர்களை கவரும் பல அம்சங்கள் நிறைந்திருப்பதால் படத்திற்கான ஓபனிங்கும் நன்றாகவே அமைந்துள்ளது என்கின்றனர்.

முதல் நாளில் தமிழ்நாடு அளவு படத்தின் வசூல் 80 லட்சம் ரூபாய் என்றும் தெலுங்கு மொழி உள்பட உலகளவில் படத்தின் வசூல் ஒட்டுமொத்தமாக 2.5 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Siddharths Takkar movie Day 1 Box Office reports are here

போர் தொழிலை முந்திய டக்கர்: அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தொழில் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முதல் நாளில் அதன் வசூல் தமிழ்நாடு அளவு 50 லட்சம் மட்டுமே உள்ளது. ஆனால், சித்தார்த்தின் டக்கர் படம் கொஞ்சம் அதிக வசூல் உடன் முதல் நாளில் முந்தியுள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சித்தார்த் படத்துக்கு இதே அளவான ஆதரவு ரசிகர்களிடம் இருந்து கிடைத்தால் டக்கர் படமும் லாபத்தை ஈட்டும் என்கின்றனர். ஆனால், டக்கர் படத்துக்கான ஸ்க்ரீன்கள் குறைந்து போர் தொழில் படத்துக்கு சென்றால் நிலைமை வேறு மாதிரி அமையும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X