Takkar Twitter Review: படம் பெயர் மட்டும் டக்கரா? படமே டக்கரா? ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கவுசிக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் தான் டக்கர். நடிகர் சித்தார்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் தனது படத்தை வெளியிட்டுள்ளார்.
சாக்லேட் பாயாக பெண்கள் மனதை கொள்ளை கொண்டு இருந்த நடிகர் சித்தார்த் இந்த படத்தில் கொஞ்சம் ரக்கட் பாயாக மாறி நடித்துள்ளார்.
டக்கர் படம் நடிகர் சித்தார்த்துக்கு கம்பேக் கொடுத்ததா? அல்லது வழக்கம் போல காலை வாரி விட்டதா? என்பது குறித்து நெட்டிசன்கள் அளித்துள்ள விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

அதிதி ராவ் வாழ்த்து: நடிகர் சித்தார்த்தின் டக்கர் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அவரது ரூமர் காதலியும் நடிகையுமான அதிதி ராவ் முதல் ஆளாக "#takkar day!!! Big luck to the whole team #Siddharth" என ட்வீட் போட்டு டக்கர் படம் மிகப்பெரிய வெற்றிப் பெற வேண்டும் என வாழ்த்தி உள்ளார்.

ஃபர்ஸ்ட் ஹாஃப் நல்லா இருக்கு: சித்தார்த் நடிப்பில் வெளியாகி உள்ள டக்கர் படத்தின் முதல் பாதி நல்லா இருக்கு என்றும் வேகமாக செல்லும் ஸ்க்ரீன் பிளே மற்றும் எந்தவொரு நான்சென்ஸ் காட்சிகளும் இடம்பெறாமல் இருப்பதே இந்த படத்துக்கு பெரிய பலமாக உள்ளது.
பழக்கப்பட்ட கதை தான் என்றாலும், சித்தார்த்தின் நடிப்பு மற்றும் முதல் பாதி படத்தை பார்க்க வைத்து விடுகிறது. இரண்டாம் பாதியும் இதே போல இருந்தால் சித்தார்த்துக்கு வெற்றி நிச்சயம் என பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.

ஃபுல் என்டர்டெயினர்: நடிகர் சித்தார்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு பக்கா கமர்ஷியல் படமாக டக்கர் படத்தை பண்ணியிருக்கேன் என பேட்டிகளில் கூறி வந்த நிலையில், டக்கர் படம் ஃபுல் என்டர்டெயினராக உள்ளது என இந்த ரசிகரும் பாராட்டி உள்ளார்.

மறக்க வேண்டிய அனுபவம்: இப்படியொரு சுமாரான படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்தேன் என்பதே மறக்க வேண்டிய அனுபவம் தான். சித்தார்த்துக்கு இந்த முறையும் ஹிட் கிடைக்கவில்லை. வெறும் 2 மார்க் வேண்டுமானால் போடலாம் என இந்த ரசிகை படத்தை விளாசி உள்ளார்.



Click it and Unblock the Notifications











