Indian 2 update - இந்தியன் 2 - நீங்கள் நினைத்ததைவிட 10 மடங்கு பிரமாண்டம் - சித்தார்த் கொடுத்த அப்டேட்

சென்னை: Indian 2 (இந்தியன் 2) இந்தியன் 2 படம் நீங்கள் நினைத்ததைவிட பத்து மடங்கு பிரமாண்டமாக இருக்கும் என சித்தார்த் தெரிவித்திருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். சுதந்திர போராட்டத்தையும், லஞ்சத்திற்கு எதிரான போராட்டத்தையும் மையமாக வைத்து உருவாகியிருந்த இந்தியன் மெகா ப்ளாக் ப்ஸ்டர் ஆனது. இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. அதன்படி இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இறங்கியது.

Siddharth Says about indian 2 movie update

இந்தியன் 2வில் விபத்து, ஷூட்டிங் நிறுத்தம்: படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கடந்த 2019ஆம் ஆண்டு ஷூட்டிங்கும் தொடங்கிய சூழலில் சில பிரச்னைகளின் காரணமாக ஷூட்டிங் தடைப்பட்டது. அதன் பின் மீண்டும் 2020ஆம் ஆண்டு முழுவீச்சில் ஷுட்டிங் தொடங்கியது. ஆனால் 2020ஆம் ஆண்டு தொடங்கி பரபரப்பாக நடந்துவந்த ஷூட்டிங்கில் கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சூழலில் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியன் 2 கிடப்பில் போடப்பட்டது.

களத்தில் குதித்த ரெட் ஜெயண்ட்: இதனால் இந்தியன் 2 படம் பெரும்பாலும் கைவிடப்பட்டுவிட்டது என்றே பலராலும் கருதப்பட்டது. கமல் ஹாசனும் விக்ரம் படத்தில் நடித்து மெகா ஹிட்டை கொடுத்துவிட்டார். இதனால் இந்தியன் 2 நிச்சயம் மீண்டும் தொடங்கப்படாது என்பது பலரின் பேச்சாக இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்தியன் 2 படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனமும் லைகாவுடன் இணைந்து தயாரிக்க முன் வந்தது.

Siddharth Says about indian 2 movie update

டேக் ஆஃப் ஆன இந்தியன் 2: இதனையடுத்து இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து தைவான், தென் ஆப்பிரிக்காவில் ஷூட்டிங் நடந்தன. தென் ஆப்பிரிக்காவில் ரயில் விபத்து தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது சென்னையிலும், சூரத்திலும் ஷூட்டிங் நடப்பதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2வில் சித்தார்த்: இதற்கிடையே நடிகர் சித்தார்த்தும் இந்தியன் 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் இந்தியன் 2 குறித்து பேசிய அவர், "இது வாழ்க்கையில் ஒரு முறை கிடைக்கும் அனுபவமாக நினைக்கிறேன். எந்த மொழியில் அந்த படத்தை ரிலீஸ் செய்தாலும் பிளாக்பஸ்டர் தான். அந்த படத்தில் நடிக்குமாறு எனக்கு அழைப்பு வந்ததையே ஆசிர்வாதமாக நினைக்கிறேன். என்னை அறிமுகம் செய்து வைத்த இயக்குநருடன் சேர்ந்து வேலை செய்கிறேன்.

Siddharth Says about indian 2 movie update

நன்றிக்கடன்: கமல் ஹாசனுடன் சேர்ந்து அவர் என்னை நடிக்க வைத்திருப்பது வேற லெவல். என்னை மீண்டும் அழைத்ததற்காக ஷங்கர் சாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் கமல் சார் மீதான அன்பு தான் என்னை நடிகனாக்கியது. ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்கும்போதும் நான் கொடுத்து வைத்தவன் என நினைத்துக்கொள்வேன். தற்போது அவருடன் சேர்ந்து நடிப்பது எனக்கு பெரிய விஷயம் ஆகும் ஷங்கர் சார் எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தபோது பேச்சே வரவில்லை. அதுவும் இந்தியாவின் மிகப் பெரிய படங்களில் ஒன்றில் நடிக்க அழைத்தார்.

10 மடங்கு பிரமாண்டம்: இந்தியன் 2 படம் இரண்டு ஜாம்பவான்களான கமல் ஹாசன் சார், ஷங்கர் சார் பற்றியது. கமல் ஹாசன் சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என் கனவு. இந்தியன் 2 படம் நீங்கள் நினைப்பதை விட 10 மடங்கு பெரிய அளவில் இருக்கும் என்பதை உறுதியாக சொல்வேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X