சித்தார்த் உனக்குள்ள இப்படியொரு திறமை இருக்கா.. ஆடிப்போன அதிதி ராவ்.. வேறலெவல் பர்த்டே ட்ரீட்!
சென்னை: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வரும் நிலையில், தனது காதலியான அதிதி ராவ் பிறந்தநாளை முன்னிட்டு சித்தார்த் பதிவிட்டுள்ள போஸ்ட் இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த ஆண்டு நடிகர் சித்தார்த்துக்கு சித்தா எனும் சூப்பர் ஹிட் படம் கிடைத்த நிலையில், ரொம்பவே சந்தோஷத்தில் உள்ளார்.

ஆங்கிலத்தில் கவிதை எல்லாம் தனது காதலி அதிதி ராவுக்கு சித்தார்த் பொழிந்ததை பார்த்து அவரே வியந்து போட்டுள்ள கமெண்ட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
37 வயசாகுது: நடிகர் சித்தார்த்துக்கு 44 வயதாகும் நிலையில், அவருடைய காதலியும் நடிகையுமான அதிதி ராவ் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமந்தா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நடிகைகளுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த சித்தார்த் அவர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், கடைசியாக நடிகை அதிதி ராவை தான் காதலித்து வருவதாக அறிவித்துள்ளார்.
முதல் கணவருடன் விவாகரத்து: நடிகை அதிதி ராவ் கடந்த 2009ம் ஆண்டு சத்யதீப் மிஷ்ரா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், 2013ம் ஆண்டிலேயே திருமண வாழ்வில் பிளவு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதன் பின்னர் தெலுங்கில் வெளியான மகாசமுத்திரம் படத்தில் சித்தார்த் உடன் இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர்.
காதலிக்கு கவிதை: தனது காதலி அதிதி ராவ் பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விதமாக "Isn't she lovely?
Happy Birthday partner.
Thank you for being.
All the pixies in all the worlds
Fly around sprinkling dust in your grace
Incantations and giggles fill the air
All in wait of a smile on your face

Be you be true
And thank you
For showing us
It always, without fail, takes two
See you soon. It's been too long." என கவிதை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நடிகை அதிதி ராவ், "been toooooo long...
You're a poet and I didn't know it!
Ps- I should have known you over talented boy!" என உங்களுக்குள் இப்படியொரு திறமை இருப்பதே எனக்கு தெரியாமல் போயிடுச்சே என வியந்துள்ளார். கூடிய விரைவிலேயே இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











