அந்த படமே இன்னும் ரிலீஸ் ஆகலை.. அதுக்குள்ள அதே இயக்குநருடன் கைகோர்த்த சித்தார்த்!

Recommended Video

நாம வேஷத்த தான் சாப்டுட்டு இருக்கோம் | ACTOR SIDDHARTH | ARUVAM PRESSMEET | FILMIBEAT TAMIL

சென்னை: நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் சைத்தான் கா பச்சா படம் இன்னும் வெளியாகாத நிலையில், அந்த படத்தை இயக்கிய கார்த்திக் ஜி க்ரிஷ் உடன் அடுத்ததாக டக்கர் எனும் படத்திலும் நடித்து வருகிறாராம் சித்தார்த்.

ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சித்தார்த், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வந்தாலும், சித்தார்த் எதிர்பார்க்கும் சரியான வெற்றி அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான படங்கள் படு தோல்வியை சந்தித்து வரும் நிலையில், சைத்தான் கா பச்சா மற்றும் டக்கர் படங்கள் வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ராசி இல்லை

ராசி இல்லை

தமிழ் சினிமாவில் புதிதாக வரும் நடிகர்களே பெரிய வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில், நல்ல நடிகரான சித்தார்த்துக்கு பெரிய வெற்றி படங்கள் அதிகளவு அமையவில்லை. எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சித்தார்த் நடித்தாலும், எந்த படமும் திரையரங்குகளில் ஓடாததற்கு அவரது ராசி தான் காரணம் என சிலர் கூறுகின்றனர்.

அருவம்

அருவம்

சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வந்த அருவம் படம் மிகவும் மோசமான படமாக விமர்சிக்கப்பட்டது. கலப்படம் குறித்த கதையாக இருந்தாலும், அதில் தேவையில்லாமல், பேய் கான்செப்ட்டை புகுத்தி அதையும் எடுக்கத் தெரியாமல் எடுத்து படத்தை சொதப்பி உள்ளனர்.

ஆறுதல்

ஆறுதல்

இந்த ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படம் நடிகர் சித்தார்த்துக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. பாக்ஸ் ஆஃபிஸில் பிச்சைக்காரன் அளவுக்கு சிவப்பு மஞ்சள் பச்சை வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், நல்ல படம் என்றும், குடும்பங்கள் காணும் திரைப்படமாகவும் வெளியாகி ஆறுதல் வெற்றியை கொடுத்தது.

சைத்தான் கா பச்சா

சைத்தான் கா பச்சா

கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், ராஷி கண்ணா நடிப்பில் தொடங்கப்பட்ட சைத்தான் கா பச்சா படம் என்ன ஆனதென்றே தெரியவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக அந்த படம் பற்றிய வேறு தகவல்கள் இல்லை. இந்நிலையில் சைத்தான் கா பச்சா படத்தை முடித்து விட்டு, அதே இயக்குநருடன் அடுத்த படத்திலும் நடித்து வருகிறாராம் சித்தார்த்.

டக்கர்

டக்கர்

என்னடா தலைப்பே இப்படி டக்கராக இருக்கிறது என்று பார்த்தால், படத்தின் கதையும் டக்கராக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ். இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே படத்தின் படப்பிடிப்பு சத்தமின்றி துவங்கப்பட்டு, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறதாம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு படங்களுமே ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கு வரும் என இயக்குநர் கூறியுள்ளார்.

தீரன் வில்லன்

தீரன் வில்லன்

எச். வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யு சிங் சித்தார்த்தின் டக்கர் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அபிமன்யுவுக்கு சித்தார்த்துடன் அதிரடியாக மோதும் சவாலான ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கின்றதாம்.

மஜிலி ஹீரோயின்

மஜிலி ஹீரோயின்

தெலுங்கில் வெளியான மஜிலி படத்தின் நாயகி திவ்யான்ஷா தான் டக்கர் படத்தில் சித்தார்த்துடன் ஜோடி போட்டு டக்கராக நடித்துள்ளாராம். தமிழில் என்ட்ரி கொடுக்கவுள்ள திவ்யான்ஷா, இந்த படத்திற்கு பிறகு, கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X