Siddharth - இந்த முறையாவது ஹிட் கிடைக்குமா?.. சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ
சென்னை: Siddharth (சித்தார்த்) அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்திருக்கும் சித்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆனால் படம் எதுவும் இதுவரை இயக்கவில்லை. தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடித்திருக்கிறார் அவர்.

ஓபன் டாக்: சித்தார்த்தை பொறுத்தவரை தனக்கு மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர். குறிப்பாக அரசாங்கம் ஏதேனும் தவறு செய்தால் யாருக்கும் அஞ்சாமல் ட்வீட்டும் போடுவார்.அப்படி அவர் பதிவு செய்திருந்த பல ட்வீட்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அமைதியாக இருந்துவருகிறார் சித்தார்த்.
டக்கர்: திறமையான நடிகர் என்று பெயர் எடுத்தாலும் இதுவரை பெரிய ஹிட் எதுவும் கொடுக்காமல் இருக்கிறார் சித்தார்த். அவரது நடிப்பில் கடைசியாக டக்கர் என்ற படம் வெளியானது. கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சித்தார்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இந்தப் படமும் அவர் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை. இதனால் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறார்.
இந்தியன் 2: இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார் சித்தார்த். இந்தப் படத்தின் மூலமாவது தனக்கு பெரிய பிரேக் கிடைக்கும் என்று நம்புகிறார். இருந்தாலும் சோலோ ஹீரோவாக ஒரு மெகா ஹிட்டடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருக்கிறது. இந்தச் சூழலில் அவர் அருண் குமார் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
என்ன படம்: குறும்படம் எடுத்து பிரபலமானவர் இயக்குநர் அருண்குமார். இவர் முதல் படமாக விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கினார். அந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும் வசூல் ரீதியாக அடிபட்டது. இதனையடுத்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி படத்தை இயக்கினார். பக்கா கமர்ஷியல் படமாக உருவான சேதுபதி மெகா ஹிட்டடித்தது. அவர் அடுத்ததாக சித்தா என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
எப்போது ரிலீஸ்?: அந்த சித்தா படத்தில்தான் சித்தார்த் நடித்திருக்கிறார். இதுவரை அவர் ஏற்காத கதாபாத்திரத்தை இதில் அவர் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் பாடல்களுக்கு திபு நைனன் தாமஸ் இசையமைக்க பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் அமைக்கிறார். பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய சித்தார்த்தே இந்தப் படத்தை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











