ரஜினி வில்லனை கலாய்த்து டிவீட் வெளியிட்ட சித்தார்த்.. அதுக்காக டிரம்பையா வம்புக்கு இழுக்குறது!
அமெரிக்க அதிபர் டிரெம்பை பேட்டி காண விரும்புவதாக நடிகர் சித்தார்த் டிவீட் வெளியிட்டுள்ளார்.
சென்னை: பாலிவுட் நடிகரும், ரஜினியின் 2.0 பட வில்லனுமான அக்ஷய்குமாரைக் கலாய்க்கும் விதமாக நடிகர் சித்தார்த் ஒரு டிவீட் வெளியிட்டுள்ளார்.
தமிழில் பாய்ஸ், ஆய்த எழுத்து, அவள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சித்தார்த். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். சமூகவலைதளப் பக்கத்தில் சுறுசுறுப்பாக கருத்துக்களை பதிவிடுபவர்களில் இவரும் ஒருவர்.
சினிமா மட்டுமின்றி, சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து இவர் பதிவு வெளியிடுவது வழக்கம்.

டிரம்ப்புடன் பேட்டி:
இந்நிலையில், புதிதாக அவர் வெளியிட்ட டிவீட் ஒன்றில், ‘டொனால்ட் ட்ரம்ப் அவர்களே, நீங்கள் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருவதால் எனக்கு நீங்கள் ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள், நீங்கள் எப்படி தூங்குவீர்கள், உங்களுடைய அழகின் ரகசியம் என்ன என்பது குறித்து நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கிறது. என்னிடம் இந்திய பாஸ்ப்போர்ட் இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.

மோடி பேட்டி:
சமீபத்தில் பிரதமர் மோடியை பேட்டி கண்டிருந்தார் பாலிவுட் நடிகரும், 2.0 படத்தில் ரஜினியின் வில்லனுமான அக்ஷய்குமார். மக்களவைத் தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பேட்டி பல சர்ச்சைகளில் சிக்கியது.
ரசிகர்கள் ஒப்பீடு:
இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பான அன்றே தனது டிவிட்டர் பக்கத்தில் அது பற்றி சித்தார்த் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது மீண்டும் அது தொடர்பாக அவர் மற்றொரு பதிவை மறைமுகமாக வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் நேரடியாக அக்ஷய் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், நெட்டிசன்கள் அந்தப் பேட்டியை இதனுடன் ஒப்பிட்டு கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.
வேற லெவல் :
சித்தார்த்தின் இந்தப் பதிவைப் பார்த்த தமிழ் ரசிகர் ஒருவர், ‘வாய்ப்பே இல்லை. வேற லெவல். நீங்க அக்ஷய்குமாரை டேக் பண்ணாதது மட்டும் தான் பாக்கி' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











