Siddharth Marriage: ஆவணி இறுதியில் அதிதி ராவை கரம் பிடித்த சித்தார்த்.. எப்படி நடந்துருக்கு பாருங்க!

வனபர்த்தி: நடிகை அதிதி ராவின் குடும்பத்துக்கு சொந்தமான வனபர்த்தி கோவிலில் இன்று அதிகாலை சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்களை சித்தார்த் மற்றும் அதிதி ராவ் சற்று முன் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

நிச்சயதார்த்தத்தை போலவே திருமணத்தையும் ரகசியமாகவே சித்தார்த் நடத்தியுள்ளார். சினிமா பிரபலங்களை எல்லாம் அழைக்காமல் எளிமையாக கோயிலில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

siddharth aditi rao marriage

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்: சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள கோயிலில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், அதே கோயிலில் இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. சற்றுமுன் திருமண புகைப்படங்களை சித்தார்த் மற்றும் அதிதி ராவ் வெளியிட்டுள்ளனர். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியுடன் சித்தார்த்தும் வெள்ளையும் சந்தனமும் கலந்த நிற பட்டுச்சேலையில் அதிதி ராவும் மணக்கோலத்தில் காட்சியளிக்கும் திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

siddharth aditi rao marriage

நீயே என் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம்: திருமண புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அதிதி ராவ் இனிமேல் என் வாழ்க்கையில் நீயே என் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் என கவிதை மழையாக பொழிந்துள்ளார். துல்கர் சல்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவை வாழ்த்தி வருகின்றனர்.

siddharth aditi rao marriage

சித்தார்த்தின் முதல் மனைவி: நடிகர் சித்தார்த் ஏற்கனவே 2003ம் ஆண்டு மேக்னா நாராயணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கடந்த 2007ம் ஆண்டு சித்தார்த்துக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பின்னர், நடிகை சமந்தாவை சித்தார்த் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் பரவின. நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அந்த கிசுகிசுக்கள் ஒரு வழியாக ஓய்ந்தன. மகா சமுத்திரம் படத்தில் அதிதி ராவ் உடன் இணைந்து நடித்த நிலையில், சித்தார்த் அதிதி ராவ் காதலிக்க ஆரம்பித்து தற்போது திருமணம் செய்துக் கொண்டனர்.

siddharth aditi rao marriage

அதிதிக்கும் 2வது திருமணம்: 37 வயதாகும் நடிகை அதிதி ராவ் சித்தார்த்தை காதலித்து வந்த நிலையில், இன்று திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், அவருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். ஏற்கனவே 2009ம் ஆண்டு சத்யதீப் மிஷ்ரா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அதிதி ராவ் 2013ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

siddharth aditi rao marriage

வனபர்த்தி கோயிலில்: அதிதி ராவின் தாய் வழி தாத்தா வனபர்த்தி சமஸ்தானத்தின் கடைசி அரசர் என்பது குறிப்பிடத்தகது. அதன் காரணமாகத்தான் இன்று வனப்பர்த்தியில் உள்ள அதிதி ராவின் குடும்பத்துக்கு சொந்தமான ஸ்ரீரங்கநாயக சுவாமி திருக்கோயிலில் எளிமையான முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. சித்தார்த் மற்றும் அதிதி ராவின் புதிய வாழ்க்கை சிறக்க அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X