twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "இனி 2ஜி கிடையாது... தேசிய கீதத்துக்கு எழுந்து நில்லுங்க..!" - சித்தார்த் சர்ச்சை ட்வீட்!

    By Vignesh Selvaraj
    |

    "இனி 2ஜி கிடையாது... தேசிய கீதத்துக்கு எழுந்து நில்லுங்க..!" - சித்தார்த் சர்ச்சை ட்வீட்!

    சென்னை : கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 2ஜி வழக்கில் அனைவரும் விடுதலையானதைத் தொடர்ந்து, நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

    முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் சம்பந்தப்பட்ட 2ஜி வழக்கு தீர்ப்பு இந்தியாவில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.

    பலரும் எதிர்பார்த்த அந்தத் தீர்ப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியானது. அதைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

    சித்தார்த் ட்வீட்டால் சர்ச்சை

    சித்தார்த் ட்வீட்டால் சர்ச்சை

    தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக நடிகர் சித்தார்த், "ராஜா, கனிமொழி நடித்திருக்கும் திருட்டுப்பயலே-1 படத்துக்கான விமர்சனம் இன்று வெளியாகிறது. ஜெயலலிதா, சசிகலா மற்றும் குழுவினர் நடித்த திருட்டுப்பயலே-2 போலவே இந்தப் படத்துக்கான தீர்ப்பும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்" என ட்வீட் செய்திருந்தார்.

    ட்வீட்டை நீக்கிய சித்தார்த்

    ட்வீட்டை நீக்கிய சித்தார்த்

    2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை என்று தீர்ப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து தனது சர்ச்சைக்குரிய ட்வீட்டை நீக்கினார் சித்தார்த். அதற்குள் அந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பரவி தி.மு.க-வினரின் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

    கிண்டல் ட்வீட்

    கிண்டல் ட்வீட்

    தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, "சூப்பர் ஹிட் என்ற செய்தி வந்துள்ளது. அனைவருக்கும் விடுதலை. என் இந்தியா சிறந்தது. இந்திய அரசியலின் தூய்மையான குற்றமற்ற தன்மைக்கு என் வாழ்த்துகள். எவ்வளவு நன்றாக இருக்கிறது. இனி 2ஜி கிடையாது. தேசிய கீதம் ஒலிக்கிறது. எல்லோரும் எழுந்து நில்லுங்கள்" என ட்வீட் செய்திருக்கிறார் சித்தார்த்.

    சித்தார்த்துக்கு எதிர்ப்பு

    சித்தார்த்துக்கு எதிர்ப்பு

    சித்தார்த்தின் ட்வீட்டுக்கு பலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். சித்தார்த் பா.ஜ.க-வுக்கு சாதகமாகப் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர்.

    English summary
    Following the 2G case verdict, actor Siddharth has posted a tweet on Twitter. The 2G case verdict in the case of former Central Information Technology Minister A. Rasa and DMK president M.Karunanidhi's daughter Kanimozhi was highly anticipated. Actor Siddharth's tweet has been created controversy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X