அல்லு அர்ஜுன் கூட என்ன சண்டை.. புஷ்பா 2வுக்கு கூடிய கூட்டம்.. அந்தர் பல்டி அடித்த சித்தார்த்!
சென்னை: சித்தார்த்துக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு வெளியான சித்தா படம் மட்டுமே அவருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. அதன் பின்னர் அதிதி ராவை திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை பலரும் கடுமையாக விமர்சித்தும் ட்ரோல் செய்து கலாய்த்தும் தள்ளினர்.
சித்ரா அரவிந்தன் சோஷியல் மீடியா என சித்தார்த் பேசிய வசனத்தை இந்த ஆண்டு நம்பர் ஒன் ட்ரோல் மெட்டீரியலாகவே ரசிகர்கள் மாற்றினர். இந்நிலையில், சித்தார்த் நடித்துள்ள மிஸ் யூ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

ஏற்கனவே அந்த படம் வெளியாக இருந்த நிலையில், மழையை காரணம் காட்டி தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், இந்த வாரமும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பேட்டி ஒன்றில் பேசும் போது புஷ்பா 2 பட புரமோஷனுக்காக அல்லு அர்ஜுன் பாட்னாவுக்கு சென்றிருந்தபோது கூடிய கூட்டம் குறித்து கிண்டலாக சித்தார்த் பேசிய நிலையில், தற்போது அதுகுறித்த கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.
1080 கோடி வசூல் செய்த புஷ்பா 2: அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் 6 நாட்களில் 1002 கோடி ரூபாயும் 7வது நாளான நேற்றுடன் 1080 கோடி ரூபாய் வசூலும் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தும் என்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை முதல் நியூ இயர் விடுமுறை வரை பாக்ஸ் ஆபிஸை பந்தாடி அதிகபட்சம் 2000 கோடி முதல் 2200 கோடி வரை வசூல் செய்யும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.
ஜேசிபி வந்தால் கூட கூட்டம் கூடும்: புஷ்பா 2 படத்துக்காக அல்லு அர்ஜுன் பாட்னாவில் புரமோஷன் செய்தது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சித்தார்த் ஜேசிபி நிறுத்தினால் கூட கூட்டம் கூடும் என்று கலாய்த்திருந்தார். ஒரு காலத்தில் தெலுங்கில் டாப் ஸ்டாராக வலம் வந்த சித்தார்த்துக்கு சமீப காலமாக அங்கே பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை என்றும் அந்த காண்டு தான் இப்படி அவரை பேசத் தூண்டியது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வந்தனர்.

புஷ்பா வெற்றி பெற்றது ரொம்ப சந்தோஷம்: மிஸ் யூ படத்தின் பிரஸ் ஷோ நேற்று வெளியான நிலையில், அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நடிகர் சித்தார்த் மிஸ் யூ ரொம்ப நல்ல படம் இந்த படத்தை யாரும் மிஸ் செய்யாமல் பாருங்க.. மழைக்காக ஏற்கனவே ரிலீஸ் தேதியை மாற்றினோம். தற்போது மீண்டும் மேகமூட்டம் காணப்படுவது லேசாக அச்சத்தைக் கொடுக்கிறது. எப்படியும் நாளை மறுநாள் மழை இருக்காது என நம்புகிறோம் என்றார். அதன் பின்னர் புஷ்பா குறித்த கேள்விக்கு, சிரித்தபடி பேசிய சித்தார்த், அதை பிரச்சனையாக்க வேண்டாம். புஷ்பா மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது சந்தோஷம். எங்க படத்துக்கும் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என சித்தார்த் பேசியுள்ளார். நயன்தாரா, மாதவன் உடன் இணைந்து சித்தார்த் நடித்த டெஸ்ட் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக காத்திருக்கிறது. 8 தோட்டாக்கள் இயக்குநருடன் ஒரு படத்திலும் நடிக்கப் போகிறாராம்.


Click it and Unblock the Notifications











