Chithha Box office: சித்தா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகர் சித்தார் நடித்துள்ள சித்தா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மக்கள்
அந்த வகையில் தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் சித்தா. இந்த படத்தை எட்டாகி எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

சித்தா திரைப்படம்: நேற்று வெளியான இப்படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா, அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி உள்ளார். அண்ணன், அண்ணி, அண்ணனின் குழந்தை அழகான கதைக்களத்துடன் கதை தொடங்குகிறது. அண்ணன் திடீரென்று இறந்துவிடவே குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு சித்தார்த்தின் தலையில் விழுந்து விடுகிறது. செம ஸ்டைலாக இருக்கும் சித்தார்த் இப்படத்தில் நடுத்தவ வயது சாதாரண இளைஞனாக நடித்துள்ளார். அவரை போலவே படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமும் தங்களின் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
படத்தின் கதை: இப்படி குடும்பத்தையும், அண்ணன் மகளையும் கண்ணும் கருத்துவமாக கவனித்து வர, திடீரென்று அண்ணன் குழந்தை காணாமல் போகிறது. யார் குழந்தையை கடத்தினார்கள்? கடத்தலுக்கான காரணம் என்ன? சித்தார்த் குழந்தையை கண்டுபிடித்தாரா? என்பதுதான் படத்தின் மீதி கதை.
முதல் நாள் வசூல்: சித்தா திரைப்படம் நேற்று வெளியான நிலையில், படம் ரூ.1 முதல் ரூ.2.6 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று ராகவா லாரன்சின் சந்திரமுகி 2, ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த இறைவன் திரைப்படமும் நேற்று வெளியான நிலையில், சித்தா திரைப்படத்திற்கு குறைவான வசூலையே பெற்றுள்ளது. ஆனால், தொடர் விடுமுறை இருப்பதால், படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாராட்டிய கமல்: இப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் மீடியா வரை அனைவரும் படத்தை பார்த்து பாராட்டி வரும் நிலையில் உலகநாயகன் கமல்ஹாசனும் இப்படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க அனைவரும் பார்க்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











