Siddhi idnani: பீச்சில் சில் பண்ணும் சிம்பு பட நாயகி.. க்யூட் போட்டோஸ் இதோ!

சென்னை: வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சித்தி இத்னானி. சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் இந்தப் படம் வெளியானது.

முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் சித்தி இத்னானி.

Siddhi idnanis new photoshoot in beach makes her fans thrilling

தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

நடிகை சித்தி இத்னானி: சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான வெந்து தணிந்தது காடு என்ற படத்தின்மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார் சித்தி இத்னானி. தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். தன்னுடைய கன்னக்குழி அழகால் இவர் தொடர்ந்து ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். இவர் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Siddhi idnanis new photoshoot in beach makes her fans thrilling

நடிக்க விரும்பும் நடிகர்கள்: முதல் படமே இவருக்கு மிகச்சிறப்பாக அமைந்ததால் அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருவதாக சித்தி இத்னானி பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். சிம்பு, ஆர்யாவுடன் தான் நடித்துள்ளது குறித்து உற்சாகம் தெரிவித்த சித்தி இத்னானி, தொடர்ந்து தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோருடன் நடிக்க தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இவர் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டதாக பரவிய தகவலையும் இவர் மறுத்துள்ளார்.

தமிழ் ரசிகர்கள்தான் ஹார்ட்: தமிழ் ரசிகர்கள்தான் தன்னுடைய ஹார்ட் என்று கூறியுள்ள சித்தி இத்னானி, தமிழ்நாடுதான் தன்னுடைய வீடு என்றும் தெரிவித்துள்ளார். எத்தனையோ மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழில் கிடைத்த வரவேற்பும் ரசிகர்கள் தந்த அன்பும் எப்போதும் மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார். கிசுகிசு குறித்த கேள்விக்கு பதிலளித்த சித்தி இத்னானி, அதுகுறித்தெல்லாம் கவலை கொள்ளக்கூடாது என்றும் சினிமாவிற்கு வந்துவிட்டால் இதையெல்லாம் எதிர்கொண்டாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிம்புவுடன் கிசுகிசு: நிறைய விஷயங்கள் நல்லதாக வரும் என்றும் சில விஷயங்கள் தவறாகவே வரும் என்றும் கூறியுள்ள சித்தி இத்னானி, சிம்புவுடனான கிசுகிசுவையும் தான் இப்படித்தான் பார்ப்பதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்தி இத்னானி, தற்போது மும்பை கடற்கரையின் பின்புலத்தில் அட்டகாசமான புகைப்படங்களை எடுத்துள்ளார். அளவான கவர்ச்சியில் இவர் எடுத்துள்ள இந்தப் புகைப்படங்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதையடுத்து அதிகமான லைக்ஸ்களை இந்தப் புகைப்படங்கள் பெற்று வருகின்றன.

Siddhi idnanis new photoshoot in beach makes her fans thrilling

நாடகம் மூலம் என்ட்ரி: மும்பையில் பிறந்து வளர்ந்தவரான சித்தி இத்னானி, ஆஜே ராவிவார் சேவ் என்ற குஜராத்தி நாடகத்தின் மூலம் தனது வாழ்க்கையை துவங்கியவர். மிஸ் திவா போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டியாளராக வந்தவர். மேலும் மிஸ் இந்தியா சூப்பர் டேலண்ட் பட்டத்தை வென்றுள்ளார். தமிழில் இவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ள போதிலும் கடந்த 2016ம் ஆண்டில் கிராண்ட் ஹலி என்ற குஜராத்தி படம்தான் இவரது அறிமுக படம். தொடர்ந்து தென்னிந்திய அளவில் தெலுங்கில் இவரது அறிமுகம் அமைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X