'யார் கூட வேணா நடி... இந்த சிம்பு கூட மட்டும் வேணவே வேணாம்!' -சமந்தாவுக்கு சித்தார்த் அட்வைஸ்

By Shankar

Sidhardh advises Samantha not to act with Simbu
தமிழில் எந்த ஹீரோவுடன் வேண்டுமானாலும் நடி.. ஆனால் சிம்புவுடன் மட்டும் வேணவே வேணாம் என்று தன் காதலி சமந்தாவுக்கு அட்வைஸ் செய்துள்ளாராம் நடிகர் சித்தார்த்.

சமந்தா தமிழில் அறிமுகமானதே சிம்புவுக்கு ஜோடியாகத்தான். விண்ணாத் தாண்டி வருவாயாவில் அவர்தான் சிம்பு ஜோடி.

பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். இதில்தான் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
படத்தில் சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என சிம்பு விரும்பினாராம். எனவே சமந்தாவிடம் பேசியுள்ளனர்.

இது பற்றி அறிந்ததும் சிம்பு படத்தில் நடிக்க வேண்டாம் என சமந்தாவுக்கு சித்தார்த் தடை போட்டுவிட்டதோடு, தமிழில் யாருடன் வேண்டுமானாலும் நடி.. ஆனா சிம்புவுடன் வேணாம் என்று அட்வைஸ் செய்தாராம் சித்தார்த்.

அடுத்த முறை பட நிறுவனம் சார்பில் சமந்தாவிடம் பேசியபோது, கால்ஷீட் இல்லை என கூறி எஸ்கேப் ஆகிவிட்டாராம் சமந்தா.

இதைக் கேள்விப்பட்டதும் 'ஆஹா.. பார்ட்டி அவ்வளவு வீக்கா.... சரி, மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, நான்கு ஹீரோயின்களுடன் காதல் பிரேக்கப் ஆன சித்தார்த்தை விடவா நான் ஆபத்தானவன்..' என கமெண்ட் அடித்திருக்கிறார் சிம்பு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X