சமந்தாவுடன் திருமணம் என்பது வெறும் வதந்திகளே! - சித்தார்த்
ஹைதராபாத்: நடிகை சமந்தாவை தான் மணந்து கொண்டதாக வெளியான செய்திகள் வெறும் வதந்திகளே என்று கூறியுள்ளார் நடிகர் சித்தார்த்.
கன்னித்தீவு கதை மாதிரி சமந்தா - சித்தார்த் காதல் மற்றும் ரகசிய திருமண கதைகள் பரவி வருகின்றன.
இருவரும் ஜோடியாக நடித்தனர். பின்னர் ஜோடியாக கோவில்களுக்கு சாமி கும்பிடச் சென்றனர். பட விழாக்களுக்கும் சேர்ந்தே வந்தனர்.

இதைத் தொடர்ந்து இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்று கூறப்பட்டது. பட வாய்ப்புகள் பாதிக்காமல் இருக்கவே இருவரும் ரகசியம் காப்பதாக வேறு தகவல் வந்தது.
முதலில் மறுத்து வந்த சமந்தா இப்போது கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இப்போது முதல் முறையாக மறுப்பு தெரிவித்துள்ளார் சித்தார்க்.
அவர் கூறுகையில், "சமந்தாவும் நானும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை. வெறும் வதந்திதான். இதுபோன்ற செய்திகள் எனக்குப் புதிதில்லை.
ஆனால் இப்போது சினிமாவில்தான் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன். நான் நடித்த இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. அவற்றில் ஒன்று தெலுங்குப் படம். இன்னொன்று ஜிகிர்தண்டா தமிழ்ப் படம்.
எனக்கு இந்தி படங்களில் நடிக்கும் ஆர்வம் இல்லை. தென் இந்திய மொழிப் படங்களில் நடிக்கவே ஆர்வம்," என்றார்.


Click it and Unblock the Notifications











