பொம்பள புள்ளைங்களால் 9ம் வகுப்பில் ஃபெயில் ஆன பிரபல நடிகர்
மும்பை: பெண்களால் 9ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் சிங் இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, பரினீத்தி சோப்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளது ஜபரியா ஜோடி படம் வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சித்தார்த் மற்றும் பரினீத்தி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

அவர்கள் இருவரும் கபில் சர்மா நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசினார்கள். திரையில் நடிகைகளை எளிதில் ரொமான்ஸ் செய்யும் சித்தார்த் மல்ஹோத்ரா பள்ளியில் படித்தபோது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தோல்வி அடைந்தார். அதற்கு காரணம் பெண்கள் என்று கபில் சர்மா தெரிவித்தார்.
கபில் கூறியதை சித்தார்த் மறுக்கவில்லை மாறாக அது உண்மை என்றார். இது குறித்து சித்தார்த் மேலும் கூறியதாவது,
நான் 9ம் வகுப்பு படித்தபோது(ஆண்கள் பள்ளி) பெண்களால் என் கவனம் சிதறியது. அதனால் தான் அந்த தேர்வில் ஃபெயில் ஆனேன். அதிலும் ஒரு நல்லது நடந்தது. அதன் பிறகு என்னை இருபாலர் படிக்கும் பள்ளியில் சேர்த்தார்கள். நான் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன் என்றார்.

நீங்கள் யாரையாவது கடத்த வேண்டும் என்றால் யாரை கடத்துவீர்கள் என்று கபில் சர்மா கேட்டார். அதற்கு பரினீத்தியோ பாலிவுட் நடிகை கரீனா கபூரின் கணவரும், நடிகருமான சயிப் அலி கானை கடத்த விரும்புவதாக தெரிவித்தார். சித்தார்த் மல்ஹோத்ராவோ, நான் கரீனா கபூரின் 2 வயது மகன் தைமூர் அலி கானை கடத்த விரும்புகிறேன் என்று கூறினார்.
பாலிவுட் பிரபலங்களின் குழந்தைகளில் தைமூர் அலி கான் தான் மிகவும் பிரபலம். புகைப்படக் கலைஞர்கள் எந்நேரம் பார்த்தாலும் தைமூரை தான் பின் தொடர்கிறார்கள். தைமூருக்கு ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். தைமூர் போன்று பொம்மைகள் கூட விற்பனை செய்யப்படுகின்றது.
தைமூர் ஏற்கனவே மிகவும் பிரபலமாகிவிட்டதால் மும்பையில் படிக்க வைத்தால் சரிபட்டு வராது என்று முடிவு செய்துள்ள கரீனா அவரை லண்டனுக்கு அனுப்பி படிக்க வைக்கப் போகிறாராம்.
தைமூர் நடந்தால் செய்தி, சிரித்தால் செய்தி, வீட்டை விட்டு வெளியே வந்தால் செய்தி என்று சயிப் அலி கானின் மகளும், நடிகையுமான சாரா தெரிவித்தார். அந்த அளவுக்கு அந்த குட்டிப் பையன் பிரபலம்.


Click it and Unblock the Notifications











