எழிலும் கவினும் இந்திக்குப் போறாங்க... நடிகர் அருண் விஜய் கேரக்டரில் சித்தார்த் மல்ஹோத்ரா
சென்னை: தமிழில் அருண் விஜய் நடித்து ஹிட்டான தடம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
அருண் விஜய், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட், தன்யா ஹோப், சோனியா அகர்வால், பெஃசி விஜயன், யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்த படம், தடம்.
மகிழ் திருமேனி இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். அருண் ராஜ் இசை அமைத்திருந்தார். ரேடன் த சினிமா பீப்பிள் என்ற பட நிறுவனம் சார்பாக இந்தர் குமார் தயாரித்திருந்தார்.

மிரட்டல் திரைக்கதை
உண்மை கதை ஒன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த மர்டர் மிஸ்டரி படத்தின் திரைக்கதை மிரட்டலாக இருந்தது. அருண் விஜய் சிறப்பாக நடித்திருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த பெஃசி விஜயன், பெண் போலீசாக நடித்திருந்த வித்யா பிரதீப், திருடனாக நடித்திருந்த யோகிபாபு ஆகியோரின் நடிப்பும் பேசப்பட்டது.

தெலுங்கில் ரெட்
அருண் விஜய், எழில், கவின் என்ற இரண்டு கேரக்டரில் நடித்திருந்த இந்தப் படம் தமிழில் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படம், தெலுங்கில் ரெட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. அருண் விஜய் நடித்த கேரக்டரில் ராம் நடிக்கிறார். மற்றும் நிவேதா பெத்துராஜ், அம்ருதா ஐயர், மாளவிகா சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தி ரீமேக்
கிஷோர் திருமலா இயக்குகிறார். ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து கன்னடத்திலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில், அருண் விஜய் நடித்த கேரக்டரில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார்.

விஷ்ணுவர்தன்
இவர் ஏக் வில்லன், பிரதர்ஸ், கபூர் அண்ட் சன்ஸ், எ ஜென்டில்மேன், மர்ஜவான் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது விஷ்ணுவர்தன் இயக்கும் ஷேர்ஷா படத்தில் நடித்துவருகிறார். முரத் கேடானி தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











