இந்து கடவுள்களை அவமதிப்பதா.. கருப்பர் கூட்டத்திற்கு பிரபல இயக்குநர் வீடியோ மூலம் எச்சரிக்கை!
சென்னை: இந்து கடவுள்களையும், முருகப் பெருமானையும் கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனல் மூலம் சிலர் விமர்சனம் செய்தும், அவமதித்தும் வருவதற்கு பிரபல இயக்குநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கந்த சஷ்டி கவசம் என்ற வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
அந்த வீடியோவை வெளியிட்ட கருப்பர் கூட்டத்தை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

அந்த சிவனாலயே முடியாதுடா
கருப்பர் கூட்டத்துக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடராஜ், தனது டிவிட்டர் பக்கத்தில், இது தொடர்பாக ஆவேசமான பல ட்வீட்களை போட்டுள்ளார். " போங்கடா முட்டாளுங்களா... முருகனை பத்தி சொல்ல.. சிவனாலேயே முடியாதுடா.." என்றும், சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது... சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் கிடையாது... சரவணபவாய நமஹ..." எனவும் பதிவிட்டுள்ளார்.

முருகப் பெருமானை கொச்சைப்படுத்தி
கந்த சஷ்டி புராணம் சொல்வதாகக் கூறிக் கொண்டு, கருப்பர் கூட்டம் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்து கடவுள்களை அவமதிக்கும் விதமாக பல சர்ச்சை கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதை கேட்ட பல பக்தர்கள், அந்த யூடியூப் சேனலுக்கும், அதை நடத்துபவர்களுக்கு எதிராகவும் வழக்குகளை தொடுத்து, தங்களின் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.

இயக்குநர் கெளரவ் கண்டனம்
இந்நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு, பிரபல இயக்குநர் கெளரவ் நாராயணன், கருப்பர் கூட்டத்திற்கு தனது கடுமையான கண்டனங்களை முன் வைத்துள்ளார். தூங்கா நகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் போன்ற படங்களை இயக்கிய இவர், முருகனை சீண்ட வேண்டாம் என்றும் எச்சரித்து இருக்கிறார்.
மாதா பிதா குரு தெய்வம்
மாதா பிதா குரு தெய்வம் என ஏன் வரிசைப் படுத்தி இருக்கிறார்கள் தெரியுமா என தனது வீடியோவில் விளக்கம் கொடுத்துள்ள கெளரவ், மாதா மூலமாக பிதாவை அறியலாம், பிதா மூலமாக நல்ல குருவை அறியலாம், குரு மூலமாக கடவுள் பாதையை அடையலாம் என்ற பொருளுக்காகவே அப்படி கூறியிருக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.

உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா
மேலும், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், அது உங்க இஷ்டம், அதை யாரும் பெரிது படுத்தவில்லை. ஆனால், இந்து கடவுள்களையும், தமிழ் கடவுளான முருகப் பெருமானையும் கொச்சைப் படுத்தும் விதமாக பேச யாருக்கும் உரிமை இல்லை. உங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, அதை நிறுத்திக் கொள்ளுங்கள் என எச்சரித்தும் உள்ளார்.


Click it and Unblock the Notifications











