விஜய் மகன் இயக்கிய சிக்மா.. வெளியானது டீசர்.. ஜேசன் சஞ்சய் இயக்குநராக மிரட்டிருக்காரே ப்பா
சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். சந்தீப் கிஷனை வைத்து அவர் இயக்கிவரும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. படத்துக்கு சிக்மா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. தமன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படத்துடைய டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி அரசியல் பிரவேசம் செய்திருக்கிறார். இதன் காரணமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம்தான் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க அவரது மகனான ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாவார் அவரை கொண்டாடலாம் என்று தளபதி ரசிகர்கள் கணக்கு போட்டிருந்தார்கள்.
ஜேசன் கொடுத்த ட்விஸ்ட்: ஆனால் அவரோ தனது தந்தை வழியை தேர்ந்தெடுக்காமல் தாத்தா வழியில் செல்கிறார். கனடா நாட்டில் சினிமா தொடர்பான படிப்பை படித்த அவருக்கு இயக்குநர் ஆசைதான் துளிர்விட்டிருக்கிறது. படிக்கும்போதே ட்ரிகர் என்ற குறும்படத்தை எடுத்த அவர்; கோலிவுட்டில் இயக்குநராகும் முடிவில் இருந்தார். அவரது முடிவுக்கு லைகா நிறுவனம் துணை நின்றது. படத்தின் பூஜையும் போடப்பட்டது.

ஒத்துக்கொள்ளாத ஹீரோக்கள்: தனது கதையை அவர் கோலிவுட்டில் ஏகப்பட்ட ஹீரோக்களிடம் சொன்னதாகவும் ஆனால் அவர்கள் யாருமே ஒத்துக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. சூழல் இப்படி இருக்க சந்தீப் கிஷனை வைத்து முதல் படம் இயக்கும் வேலையை தொடங்கினார் ஜேசன். தமன் அப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் மோஷன் போஸ்டர் எல்லாம் வெளியாகி பட்டையை கிளப்பின.
படத்தின் பெயர் சிக்மா: மேலும் படத்துக்கு சிக்மா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் தம்பி ராமைய்யா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக ஜேசன் மிகப்பெரிய இயக்குநராக வருவார் என்று அவர் உட்பட படத்தில் பணியாற்றும் அனைவருமே சொல்லிவருகிறார்கள். இதன் காரணமாக படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று வெளியான டீசர்: அதன்படி சிக்மா படத்தின் டீசர் இன்று ரிலீஸாகியிருக்கிறது. ஹீரோ பணத்தை கொள்ளையடிப்பதும், அதனால் வரும் பிரச்னைகளை சமாளிப்பதும்தான் கதை என்பது டீசரை பார்க்கும்போது தெரிகிறது. மேலும், கண்டிப்பாக இது பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருப்பதையும் டீசர் உறுதி செய்திருக்கிறது. டீசரை பார்த்த ரசிகர்கள் படம் நிச்சயம் ஹிட்டடிக்கும் என்றும் விஜய்யின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் சொல்ல ஆரம்பித்திருக்கிறர்கள்.


Click it and Unblock the Notifications











