Siima Awards 2024 : 5 விருதுகளை தட்டி தூக்கிய ஜெயிலர்.. யார் யாருக்கு என்னென்ன விருது தெரியுமா?

சென்னை: சினிமா கலைஞர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களின் படைப்பை பாராட்டியும் ஆண்டு தோறும் சைமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி நேற்று துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில், தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2023ம் ஆண்டு வெளியான படங்களுக்கான சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை என பல பிரிவுகளில் விருது வழங்கப்பட்டன. இதில் ஜெயிலர் படம் 5 விருதுகளை தட்டித்தூக்கியது.

சூப்பர ஸ்டார் ரஜினிகாந்த், நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர்கள் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், தமன்னா என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்தனர்.

siima awards 2024 rajinikanth nelson dilipkumar

பெரும் வசூல்: நெல்சனின் ஆக்சன் - பிளாக் காமெடி ஜானரில் வெளியான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். படம் வெளியாவதற்கு முன்னதாக பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தன. ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் பெரும் கொண்டாட்ட திரைப்படமாக அமைந்தது பாக்ஸ் ஆபிசில் பெரும் வசூலை அள்ளியது.

இந்நிலையில் துபாயில் நடைபெற்ற சைமா விருதுகள் வழங்கும் விழாவில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் 5 விருதுகளை குவித்தது. இதில் சிறந்த இயக்குனருக்கான விருதை இயக்குனர் நெல்சன் தட்டிச் சென்றார். மேலும், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மகனாக நடித்த வஸந்த் ரவிக்கு சிறந்த துணை நடிகருக்கான சைமா விருது வழங்கப்பட்டு உள்ளது.

சிறந்த பாடலாசிரியர்: ஜெயிலர் படத்தில் இடம்பெறும் ரத்தமாரே பாடலை எழுதியதற்காக நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான சைமா விருது வழங்கப்பட்டது. மேலும், அதிரிபுதிரி வெற்றியை குவித்த ஜெயிலர் படம் சிறந்த படத்துக்கான விருதை வென்றது. நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு சிறந்த காமெடி நடிகருக்கான விருதை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வழங்கினார்.

இதுதவிர தமிழ் திரையுலகில் சாதனைக் கலைஞராக வலம் வந்த கேப்டன் விஜயகாந்துக்கு சிறப்பு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த விருதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X