விஜய்க்குள் இருக்கும் இன்னொருவன்: சொல்கிறார் மாலா அக்கா
சென்னை: பைரவா படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை பார்த்து கை, கால் உதறியதாக நடிகை சிஜா ரோஸ் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான றெக்க படத்தில் மாலா அக்காவாக வந்தவர் சிஜா ரோஸ். விஜய் சேதுபதியை போன்றே பலரும் மாலா அக்கா, மாலா அக்கா என்று அவர் மீது பாசம் வைத்துவிட்டனர்.

இந்நிலையில் சிஜா விஜய்யின் பைரவா படத்தில் நடித்திருந்தார். பைரவா படத்தில் நடித்தது குறித்து அவர் கூறுகையில்,
பைரவாவில் இளம் தாயாக நடித்தேன். எனக்கும், விஜய்க்கும் முறையான அறிமுகம் இல்லாததால் படப்பிடிப்பில் அவரை பார்த்ததும் கை, கால் உதற ஆரம்பித்துவிட்டது.
அந்நேரம் பார்த்து பெரிய வசனம் பேச வேண்டிய காட்சியை படமாக்கினார்கள். நானும் பதட்டத்துடனேயே நடித்தேன். ஆனால் அந்த காட்சி நல்லபடியாக வந்துவிட்டது.
நான் நன்றாக நடித்ததாக விஜய்யே வந்து பாராட்டினார். எனக்கு அதை கேட்டு மகிழ்ச்சியாகிவிட்டது. செட்டில் அவர் அமைதியாக இருப்பார். ஆனால் கேமராவுக்கு முன் வந்துவிட்டால் வேறு ஆளாக மாறி நடிக்கத் துவங்கிவிடுவார் என்றார்.


Click it and Unblock the Notifications











