சிக்கந்தர் டீசர் பார்த்தவுடனே சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஷாக்.. ஏமாத்திட்டாரே ஏ.ஆர். முருகதாஸ்!

சென்னை: சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படத்தின் டீசர் சற்றுமுன் வெளியானது. ஆனால், அந்த டீசரை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சல்மான் கான் ரசிகர்களும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஷாக் ஆகிப் போயுள்ளனர்.

ஹாலிவுட் படங்களையும் அசிஸ்டண்ட் டைரக்டர் கதைகளையும் காப்பியடித்து படங்களை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ் என வரிசையாக அவர் மீது குற்றச்சாட்டுகள் குவிந்த நிலையில், சில வருடங்கள் ஃபீல்ட் அவுட்டாகவே ஆனார்.

Sikandar Salman Khan Sivakarthikeyan

அவரை நம்பி சல்மான் கான் மிகப்பெரிய படத்தை கொடுத்த நிலையில், சிக்கந்தர் டீசர் ரசிகர்களை கவரும் விதத்தில் இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் கமெண்ட் செக்‌ஷன் முழுவதையும் நிரப்பி வருகின்றன.

ஷங்கர் போல அவுட்டேட்டட்: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் ஷங்கர் போலவே அவுட்டேட்டட் ஆகிவிட்டாரா என்கிற கேள்வியை பாலிவுட் ரசிகர்கள் முதல் கோலிவுட் ரசிகர்கள் வரை எழுப்பி வருகின்றனர். 8 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான சல்மான் கான் படங்களின் டீசர்கள் கூட அதிரடியாக இருந்த நிலையில், உப்பு சப்பு இல்லாத ஒரு மட்டமான டீசராக சிக்கந்தர் டீசர் இருப்பதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளனர்.

Sikandar Salman Khan Sivakarthikeyan

சிக்கந்தர் டீசர் எப்படி?: சல்மான் கான் நடிப்பில் கடைசியாக வெளியான டைகர் 3 படமே பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், அவரை வைத்து அடுத்து சிக்கந்தர் எனும் படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். வரும் ரம்ஜான் பண்டிகைக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசரில் சல்மான் கான் ஆரம்பம் முதல் இறுதி வரை சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால், எதுவும் புதிதாகவோ சுவாரஸ்யமாகவோ இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. டீசரில் சில நொடிகளே வரும் சத்யராஜ் மற்றும் ராஷ்மிகா மந்தனா தான் ரசிகர்களை கவர்கின்றனர். காஜல் அகர்வாலை எங்கே பாஸ் காணோம் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஷாக்: சிக்கந்தர் டீசரை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மதராஸி டைட்டிலை போல ஏ.ஆர். முருகதாஸ் கதையையும் பழைய கதையாக எடுத்து வைத்திருப்பாரோ என்கிற அச்சம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கே எழுந்துள்ளது. சிக்கந்தர் டீசரை விட மதராஸி டீசரும் சிவகார்த்திகேயன் நடிப்பும் தீயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சல்மான் கானை வைத்து சர்கார் படத்தை ரீமேக் செய்திருக்கிறாரா ஏ.ஆர். முருகதாஸ் என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். படத்தின் டிரெய்லர் வந்தால் தான் டீட்டெய்லாக தெரியும் என்றும் சல்மான் கானின் ஆக்‌ஷன் காட்சிகள் அசத்தல் என அவரது ரசிகர்கள் டீசரை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X