சிக்கிக்கு.. 'யு சர்டிபிகேட்' சிக்கிக்கிச்சு...!
சென்னை: சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளதாம். படக் குழுவில் குஷியாகியுள்ளனர்.
என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிப்பில் என்.ராஜேஷ்குமார் இயக்கத்தில் மிதுன் - மிருதுளா நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் இந்த சிக்கிக்கு சிக்கிக்கிச்சு.

முழுக்க முழுக்க ஓடும் ரயிலிலேயே இந்தப் படம் முழுவதையும் படம் பிடித்துள்ளனர். இது ஒரு தலைக் காதல் கதையாகும்.
படத்தை முடித்து சென்சார் சான்றிதழுக்காக அனுப்பி வைத்தனர். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் கொடுத்து பாராட்டியும் இருக்கிறார்கள்.
விரைவில் படம் திரைக்கு வர உள்ளது. படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்திருப்பதால் படக் குழுவினர் சந்தோஷமடைந்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications