twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிக்குக்கு சிக்கிக்கிச்சு - இது படத்தோட தலைப்புதாங்க!

    By Shankar
    |

    சிக்குக்கு சிக்கிக்கிச்சு என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது. என் ராஜேஷ் குமார் இயக்கும் இந்தப் படத்தில் மிதுன் - மிருதுளா நடிக்கின்றனர்.

    என் சி ஆர் கிரியேசன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் தலைப்பே ஏதோ வார்த்தை விளையாட்டு மாதிரி இருக்கே என்று இயக்குநரைக் கேட்டால் சிரிக்கிறார். ''சார்! கதையே, இதுதான். தலைப்புலேயே கதையைச் சொல்லிட்டோம்.

    நாம எங்கோ பிறந்து எப்படியோ ஏதோ ஒரு சூழ்நிலையில வளர்றோம். எப்போவோ எதிர்பாராம நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு சூழ்நிலையில இருந்து ஒரு பெண்ணை சந்திக்க நேரும்.

    அவங்க நம்ம மனசுல நினைக்கிற அதே பொண்ணா இருப்பாங்க... அந்த பொண்ண எப்படியாவது வாழ்க்கையில இணைச்சிக்கனும்னு நினைச்சி போராடுவோம். அதுல ஜெயிக்கவும் செய்வோம். தோற்கவும் செய்வோம்.

    சிக்க வேண்டியவங்களுக்கு...

    சிக்க வேண்டியவங்களுக்கு...

    ஆனால், அந்த பெண்ணால் நாம நேசிக்கப்படுற அந்த காலகட்டம் நாம காதல்ல ஜெயிச்சிட்டோம்னுதானே அர்த்தம். திருமணம் வரைக்கும்போனாதான் ஜெயிச்சதா நிறைய பேர் நினைக்கிறாங்க.அது தவறு. அந்த பொண்ணு மனசு நம்மகிட்ட வந்த மறு வினாடியே நாம ஜெயிச்சிட்டோம்கிறதுதான் உண்மை. இதைத்தான் சிக்க வேண்டியவங்களுக்கு சிக்கக்கவேண்டியவங்க சிக்கிக்கிட்டாங்கன்னு சொல்லியிருக்கோம்''என்றார்.

    என் ராஜேஷ் குமார்

    என் ராஜேஷ் குமார்

    என் ராஜேஷ் குமார் கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றவர். பாலாஜி மோகன் (காதலில் சொதப்புவது எப்படி), கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா), நலன் குமாரசாமி (சூது கவ்வும்) வரிசையில் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார். ''சிக்கிக்கு சிக்கிக்கிச்சு'' படத்தைத் தயாரித்து இயக்குகிறார்.

    ரயிலில்

    ரயிலில்

    சென்னையில் ஒருநாள் படத்தில் பிரசன்னா, சேரனுடன் காரில் பயணப்படுபவராக நடித்த மிதுன்தான் ஹீரோ. நாகராஜ சோழன் எம் எ., எல். ஏ படத்தில் நடித்த மிருதுளா ஹீரோயினாக நடித்துள்ளார். 'கொஞ்சம் நடிங்க பாஸ்' ஆதவன் காமடியைக் கவனிக்கிறார்.

    கதை முழுக்க முழுக்க ஒரு ரயிலில் நடக்கிறது. இதற்காக ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

    டி ஆர் பாட்டு

    டி ஆர் பாட்டு

    இன்னொரு முக்கிய தகவல் இதில் விஜய டி. ராஜேந்தர் ஒரு பாட்டு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்டாரோ மாரோ
    கிறுகிறுங்குது
    மோட்டோ சியாரோ
    முறுமுறுக்குது''
    கைய வீசி டாட்டா காட்டி
    சும்மா போலாமா.." என்ற குத்துப் பாடலை பாடியுள்ளார். இசையமைத்துள்ளார் விஜய் பெஞ்சமின்.

    English summary
    Sikkukku Sikkikkichi is the new movie directed by debutant N Rajesh Kumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X