அசோக் செல்வனுக்காக தனுஷ் பாடிய பாடல் .... செல்வராகவன் வெளியிட்ட வீடியோ!

சென்னை : நடிகர் அசோக் செல்வன், ஸ்ரேயா நாதர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சில நேரங்களில் சில மனிதர்கள்.

இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் பாடியுள்ள லிரிக் வீடியோ பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

ராதன் இசையமைப்பு

ராதன் இசையமைப்பு

ஏஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இந்த படத்தை அஜ்மல் கான் மற்றும் ரியா ஆகியோர் தயாரித்துள்ளனர். ராதன் படத்தின் இசையை அமைத்துள்ளார். மெய்யேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

பாடல்களை எழுதிய சினேகன்

பாடல்களை எழுதிய சினேகன்

மணிகண்டன் படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். பாடல்களை சினேகன் மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோர் எழுதியுள்ளனர்.

Recommended Video

சூது கவ்வும் பாத்துட்டு கமல் சார் கூப்டாங்க | ACTOR ASHOK SELVAN INTERVIEW | FILMIBEAT TAMIL
ரிலீசுக்கு தயாராகும் படம்

ரிலீசுக்கு தயாராகும் படம்

இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் லிரிக் வீடியோ பாடலை இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யார் வழியில் என்ற அந்தப் பாடலை வெளியிடுவதில் தான் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ் பாடிய பாடல்

இந்தப் பாடலை அவரது சகோதரர் தனுஷ் பாடியுள்ளார். அதுகுறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதனிடையே பாடலை வெளியிட்ட செல்வராகவன் மற்றும் பாடலை பாடியுள்ள தனுஷ் இருவருக்கும் படத்தின் நாயகன் அசோக் செல்வன் நன்றி தெரிவித்துள்ளார்.

பழைய படத்தின் டைட்டில்

பழைய படத்தின் டைட்டில்

கடந்த 1976 இல் வெளியான லட்சுமி மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது அசோக்செல்வன் நாயகனாக நடித்துள்ள இந்தப்படம் அந்த டைட்டிலை பெற்றுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X