சிம்பு மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால்.. வேதனையுடன் மனம் திறந்த தயாரிப்பாளர்

சென்னை: சிம்பு மட்டும் இப்போது இருப்பது போல் அப்போது இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பிரபல தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் நடிகர் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக உயர்ந்த சிம்பு ஒருகாலத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். தனது நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் விரைவாகவே கவர்ந்தார்.

பிரச்னைகளை சந்தித்த சிம்பு

பிரச்னைகளை சந்தித்த சிம்பு


சிம்பு நடிப்பில் பெயர் வாங்கினாலும் நேரம் தவறாமையில் பெயர் வாங்கவில்லை என்றே பலரும் கூறினர். அவர் மிகச்சிறந்த நடிகர்தான் ஆனால் ஷூட்டிங்குக்கு ஒழுங்காக வருவது கிடையாது அதனால் படங்கள் தாமதமாகின்றன என்று பலர் வெளிப்படையாகவே விமர்சனத்தை முன் வைத்தனர். ஆனால் ஷுட்டிங் கரெக்ட்டான நேரத்துக்கு போறோமா என்பது முக்கியமில்லை போகும்போது ஒழுங்காக வேலை செய்கிறோமா என்பதுதான் முக்கியம் என்ற பாலிசியை சிம்பு கடைப்பிடித்தார் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.

சினிமாவிலிருந்து ஒதுங்கிய சிம்பு

சினிமாவிலிருந்து ஒதுங்கிய சிம்பு

ஒருகட்டத்தில் சிம்பு தனிப்பட்ட முறையில் சில பிரச்னைகளையும் சந்தித்தார். அதுவும் சிம்புவுக்கு எதிராக சேர்ந்துகொள்ள பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தன. இருந்தாலும் சிம்பு மட்டும் ஒழுங்கான நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட் வந்து நடித்தால் அவரைப் போல் ஒரு மிகச்சிறந்த நடிகனை பார்க்கவே முடியாது. அவர் ஒரு சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என பல இயக்குநர்களும் கூறினர்.

சிம்பு கொடுத்த தரமான கம்பேக்

சிம்பு கொடுத்த தரமான கம்பேக்

இதனையடுத்து அனைத்தையும் உணர்ந்துகொண்ட சிம்பு தனது உடல் எடையை குறைத்து, எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி மாநாடு படத்தில் நடித்தார். படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனையடுத்து வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார் அந்தப் படமும் வெற்றிப்படமாக் அமைந்தது. தற்போது பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் எந்த இயக்குநரும், தயாரிப்பாளரும் தற்போது சிம்பு ஷூட்டிங்குக்கு ஒழுங்காக வருவதில்லை என்ற குற்றச்சாட்டை வைக்காததுதான். இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள் இதேபோல் முன்னரே இருந்திருந்தால் சிம்பு இந்நேரம் சென்றிருக்கக்கூடிய உயரமே வேறு என கூறிவருகின்றனர்.

வேதனைப்பட்ட சிம்பு பட தயாரிப்பாளர்

வேதனைப்பட்ட சிம்பு பட தயாரிப்பாளர்

இந்நிலையில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்பு குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "சிம்பு இன்று தருகிற ஒத்துழைப்பை அப்போது தந்திருந்தால் சிலம்பாட்டம் படத்தை நாங்கள் திட்டமிட்டிருந்த நாள்களுக்குள் முடித்திருப்போம். அது அவருடைய நேரம் சொல்வதற்கு எதுவும் இல்லை. சமீபத்தில்கூட 15 நாள்கள் நடிக்க வேண்டிய காட்சியை சிம்பு ஏழே நாள்களில் முடித்துவிட்டதாக கேள்விப்பட்டேன். ஆனால் சிலம்பாட்டம் படத்தில் 7 நாள்கள் படப்பிடிப்பை 15 நாள்களாக மாற்றிவிட்டார்" என வேதனையுடன் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X