கமலுக்கு சிலம்பம் கற்றுத் தந்த பாண்டியன் மாஸ்டரின் சிலம்பம் அகாடமி

Recommended Video

Power Pandian Silambam Class

சென்னை: பாண்டியன் மாஸ்டர் என்றால் சினிமாவில் தெரியாத ஆளே இல்லை. இவர் அகாடமியில் தற்காப்புக்காக அதிகம் கற்றுக் கொள்வது பெண்கள்தான். ஆயுத பூஜையை முன்னிட்டு சிலம்பம் பெல்ட் கிரேடிங் அக்டோபர் 2019 விழாவை நடத்தினார். அந்த விழாவில் கிருபா மாஸ்டர், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, நடிகை சாய் தன்ஷிகா, போன்ற பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.

சினிமாவில் நடிப்பதற்கு ஒருவருக்கு எப்படி நடிப்பு முக்கிய தகுதியாக பார்க்கப்படுகிறதோ, அதே மாதிரி தான், ஒரு நடிகனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான தகுதி, சண்டைப் பயிற்சி மற்றும் தற்காப்பு கலை என்னும் சிலம்பம், கராத்தே, குங்பூ, ஜூடோ மற்றும் இன்ன பிற கலைகளும் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம்.

Silambam Belt Grading October 2019 Event

தற்காப்பு கலை பயிற்சி தெரிந்திருந்தால் மட்டுமே, சினிமாவில் நடிக்கும்போது, எதிரில் இருப்பவர் தாக்குதல் நடத்தும் போதும், வில்லனோடு மோதும்போதும், அடிபடாமல் தவிர்த்து தப்பிக்க முடியும். இல்லையென்றால், உடம்பு புண்ணாவது நிச்சயம். சினிமாவில் நடிப்பவர்கள் மற்ற எந்த தற்காப்பு கலைகளை தெரிந்திருக்கிறார்களோ இல்லையோ நிச்சயம் சிலம்பம் என்னும் தற்காப்பு கலையை கற்று தேறியிருப்பார்கள்.

சிலம்பம் கற்றுத் தருவதற்கு எத்தனையோ மாஸ்டர்கள் இருந்தாலும் கூட, நடிகர் நடிகைகளுக்கு பெரும்பாலும் சிலம்பம் கற்றுக்கொடுப்பது பாண்டியன் மாஸ்டர் தான். பாண்டியன் மாஸ்டர் என்றால் சினிமாவில் தெரியாத ஆளே இல்லை. மாடக்குளம் ரவி ஆசான் என்பவர் தான் பாண்டியன் மாஸ்டரின் ஆசான். மாடக்குளம் ரவி என்றால் அனைவருக்கும் தெரியும். இவருடைய தந்தையும், இவரும் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.

அவரிடமே சிஷ்யனாக இருந்த பாண்டியன் மாஸ்டர், சினிமாவில் சூர்யா, கார்த்தி, நடிகை சாய் தன்ஷிகா, ஆர்யா, விஷால், அருண் விஜய், சாந்தனு உட்பட பலருக்கும் இவர் சிலம்பம் கற்றுக் கொடுத்திருக்கிறார். இன்றும் பலருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

கமல் நடித்த தேவர் மகன் படத்தில் சாந்து பொட்டு என்ற பாடலுக்கு முன்பு நடைபெறும் சண்டை பயிற்சியில் உடன் இருந்தார். பவர் பாண்டியன் ஆசான் சிலம்பம் ட்ரெயினிங் அகாடமி & ட்ரேடிசினல் மார்ஷியல் ஆர்ட்ஸ் சிலம்பம் ரிசர்ச் அண்ட் டெவலப்மன்ட் டிரஸ்ட் மூலம் சிலம்பம் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்.

இவர் அகாடமியில் தற்காப்புக்காக அதிகம் கற்றுக் கொள்வது பெண்கள்தான். ஆயுத பூஜையை முன்னிட்டு சிலம்பம் பெல்ட் கிரேடிங் அக்டோபர் 2019 விழாவை நடத்தினார். அந்த விழாவில் கிருபா மாஸ்டர், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, நடிகை சாய் தன்ஷிகா, போன்ற பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.

நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, நடிகர் சாந்தனு பாக்யராஜ், நடிகை சாய் தன்ஷிகா, கிருபா மாஸ்டர், மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாபெரும் நன்றியை தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X