மீண்டும் ஒரு மங்காத்தா...சிம்புவின் மாநாடு படத்தை புகழ்ந்த சுரேஷ் காமாட்சி

சென்னை : சமீபத்தில் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் ஒன்றாக இணைந்து மாநாடு படத்தை பார்த்துள்ளனர். வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர். இருந்தும் இந்த படத்தை எப்போது ரிலீஸ் செய்ய உள்ளனர் என இதுவரை அறிவிக்கவில்லை.

இது பற்றி சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ள சுரேஷ் காமாட்சி, சிம்புவும், நானும் மாநாடு படம் பார்த்தோம். வெங்கட் பிரபுவின் அசரவைக்கும் உழைப்பால் இருவருக்கும் ரொம்ப சந்தோஷம். மங்காத்தா படத்தை இயக்கியவர் மீண்டும் ஆக்ஷன் த்ரில்லராக மாஸ் பொழுதுபோக்கான படத்தை உருவாக்கி உள்ளார்.

Silambarasan and Suresh Kamatchi watch Maanaadu

எங்கள் அன்பான டைரக்டருக்கு நன்றி. எஸ்.ஜே.சூர்யாவின் அசத்தலான நடிப்பு. அழகிய நடிப்பால் அனைவரின் மனதையும் கொள்ளையடித்து விட்டார், கல்யாணி பிரியதர்ஷன். ஒய்.ஜி.மகேந்திரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கடின உழைப்பை வெளிப்படுத்திய எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் போன்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

ஆக்ஷன், த்ரில்லர் படமான மாநாடு படத்தை வெங்கட் பிரபு எழுதி இயக்கி உள்ளார். இந்த படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன், அனிஜா க்ருதி, அரவிந்த் ஆகாஷ், டேனியல் அன்னி போப் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X