twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதை பத்தி பேசாதீங்க.. அந்த கேள்வியை கேட்டவுடன் நாசுக்காக Avoid பண்ண STR.. என்ன நடந்தது?

    |

    சென்னை : நடிகர் சிம்பு உலக ரோஜா தினத்தில் புற்றுநோய்யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் ஆடிப்பாடி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

    Recommended Video

    நடிகர் STR திடீர் செய்தியாளர் சந்திப்பு | Simbhu in Apollo Hospital

    கனடாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுமிக்கு, நம்பிக்கை அளிக்கும் வகையில் செப்டம்பர் 22ம் தேதி முதல் கூட்டம் நடத்தப்பட்டது.

    ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது...கவினின் லிஃப்ட் டிரைலர் மற்றம் பட ரிலீஸ் தேதி அறிவிப்புஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது...கவினின் லிஃப்ட் டிரைலர் மற்றம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

    இந்த கூட்டத்தில் கிடைத்த நம்பிக்கை அடுத்து அந்த சிறுமி கூடுதலாக சில மாதங்கள் உயிர் வாழ்ந்ததாக கூறப்பட்டது.

    விழிப்புணர்வு தினம்

    விழிப்புணர்வு தினம்

    இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் உலக ரோஜா தினம் என்ற பெயரில் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும் இந்த தினம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    ரோஜா தினம்

    ரோஜா தினம்

    சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று உலக ரோஜா தினம் கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் சிலம்பரசன் கண்டு கலந்து கொண்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், குழந்தைகளோடு குழந்தையாக மாறி நடனம் ஆடி அவர்களை மகிழ்வித்தார்.

    நாசுக்கான பதில்

    நாசுக்கான பதில்

    இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டே ரோஸ் டே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னை அழைத்தனர் எப்போது என்னால் கலந்து கொள்ள முடியவில்லை, இப்போது கலந்து கொண்டேன் என்றார். இங்கு வந்து குழந்தைகளை சந்தித்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்றார். அப்போது ஒரு செய்தியாளர், புகை பழக்கத்தால்தான் அதிகமாக புற்றுநோய் வருகிறது, சினிமாவில் என்று, கேள்வியை முடிப்பதற்குள்ளாகவே... சார்... ப்ளீஸ்... நான் பசங்களுக்காக வந்து இருக்கேன், சினிமா பற்றி வேண்டாம் என்று மிகவும் நாசுக்காக பதிலளித்தார்.

    குழந்தைகளுக்காக

    குழந்தைகளுக்காக

    இங்கு நான் வந்தது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, இந்த ஒருநாளில் குழந்தைகள் அவர்களின் நோயை மறந்து இருந்தார்கள் இந்த அன்பைத்தான் என்னால் அவர்களுக்கு கொடுக்க முடிந்தது. குழந்தைகளுக்கு இந்த நாள் ஒரு ஊக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார். இந்த நோயிலிருந்து அவர்களால் மீண்டு வரமுடியும் என்று அவர்கள் நம்பவேண்டும் என்றார்.

    English summary
    The World Rose Day which is celebrated on September 22, Simbu too participated in the celebrations held at a private hospital Chennai and he avoids unnessery question.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X